சேவாக்கை தூக்கி பிடித்த பீட்டர்சன், தோனியை கீழே போட்டார்!!

First Published Jun 29, 2018, 2:01 PM IST
Highlights
kevin pietersen reveals his all time test odi and t20 team


இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தங்களது பார்வையில் எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த வீரர்களை கொண்ட ஒரு அணியை அறிவிப்பது வழக்கம். அந்த வரிசையில், கெவின் பீட்டர்சன் தனது பார்வையில், சிறந்த வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார்.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணியை உருவாக்கியுள்ளார். இந்த மூன்று அணிகளுக்குமே அவர் கேப்டனை நியமிக்கவில்லை. 

மூன்று விதமான போட்டிகளிலும் சேவாக்கைத் தான் தொடக்க வீரராக தேர்வு செய்துள்ளார். இது சேவாக்கை பெருமைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஆனால் ஒருநாள், டி20, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று விதமான சாம்பியன்ஷிப்பையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்த தோனியை, டி20 அணிக்கு மட்டுமே பீட்டர்சன் தேர்வு செய்துள்ளார். 

அதேபோல, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை டெஸ்ட் அணிக்கு மட்டுமே தேர்வு செய்துள்ளார். ஒருநாள் அணிக்கு தேர்வு செய்யவில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் சச்சின். ஆனால் சச்சினை ஒருநாள் அணியில் பீட்டர்சன் தேர்வு செய்யவில்லை.

எனினும் பீட்டர்சன் அவரது பார்வையிலிருந்து சிறந்த அணியை தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்த அணிகளை பார்ப்போம்..

கெவின் பீட்டர்சன் தேர்வு செய்த டெஸ்ட் அணி:

சேவாக், சச்சின், ஜாக் காலிஸ், ரிக்கி பாண்டிங், குமார் சங்ககரா(விக்கெட் கீப்பர்), டிவில்லியர்ஸ், ஷான் போலாக், பிரெட் லீ, ஷேன் வார்னே, ஆண்டர்சன், மெக்ராத்.

ஒருநாள் அணி:

சேவாக், கிறிஸ் கெய்ல், ரிக்கி பாண்டிங், விராட் கோலி, சங்ககரா(விக்கெட் கீப்பர்), ஜாக் காலிஸ், போலாக், டேனியல் வெட்டோரி, ஷேன் வார்னே, டேரன் காஃப், மெக்ராத்.

டி20 அணி:

சேவாக், கெய்ல், விராட் கோலி, டிவில்லியர்ஸ், ஜாக் காலிஸ், தோனி(விக்கெட் கீப்பர்), சங்ககரா, பிரெட் லீ, ஷேன் வார்னே, டேரன் காஃப், முத்தையா முரளிதரன்.
 

click me!