இந்திய 'ஏ' அணியின் கேப்டன்களாக கருண் நாயர், மணீஷ் பாண்டே நியமனம்…

Asianet News Tamil  
Published : Jun 30, 2017, 09:32 AM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
இந்திய 'ஏ' அணியின் கேப்டன்களாக கருண் நாயர், மணீஷ் பாண்டே நியமனம்…

சுருக்கம்

Karun Nair and Manish Pandey appointed as captain of Indian A team

தென் ஆப்பிரிக்க செல்லும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் இந்திய 'ஏ' அணியின் டெஸ்ட் ஆட்டங்களுக்கான அணியின் கேப்டனாக கருண் நாயரும், ஒருநாள் ஆட்டங்களுக்கான அணியின் கேப்டனாக மணீஷ் பாண்டேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய 'ஏ' அணி, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க 'ஏ' அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

அதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க 'ஏ' அணியுடன் 2 டெஸ்ட் ஆட்டங்களில் களம் காண்கிறது. இதில் முத்தரப்பு ஒருநாள் தொடர், ஜூலை 26-ஆம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் மோதும் ஆட்டத்துடன் தொடங்குகிறது.

இந்திய 'ஏ' அணி விவரம்

டெஸ்ட் அணி:

கருண் நாயர் (கேப்டன்), பிரியங்க் பஞ்சல், அபினவ் முகுந்த், ஷ்ரேயாஸ் ஐயர், அங்கித் பாவ்னே, சுதிப் சாட்டர்ஜி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹனுமா விஹாரி, ஜெயந்த் யாதவ், ஷாபாஸ் நதீம், நவ்தீப் சாய்னி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர், அனிகெத் செளதரி, அங்கித் ராஜ்புத்.

ஒருநாள் ஆட்டம்:

மணீஷ் பாண்டே (கேப்டன்), மன்தீப் சிங், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, கருண் நாயர், கிருணால் பாண்டியா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், அக்ஸர் படேல், யுவேந்திர சாஹல், ஜெயந்த் யாதவ், பாசில் தாம்பி, முகமது சிராஜ், ஷர்துல் தாகுர், சித்தார்த் கெளல்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Asian Games 2026: ஷஃபாலி வர்மா மின்னல் வேக சதம்! வங்கதேசத்தை பந்தாடி பைனலுக்கு சென்ற இந்தியா!
Asian Games 2026: வெறும் 5 ஓவரில் ஜப்பானை ஊதித்தள்ளிய இந்திய மகளிர் அணி.. செமி பைனலுக்கு என்ட்ரி!