சதம் எடுத்து அசத்திய கருண்…

 
Published : Dec 19, 2016, 12:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
சதம் எடுத்து அசத்திய கருண்…

சுருக்கம்

சென்னை

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் சதம் எடுத்து அசத்தியுள்ளார்.

சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 157.2 ஓவர்களில் 477 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மொயீன் அலி 146, ஜோ ரூட் 88, லியாம் டாசன் ஆட்டமிழக்காமல் 66, ஆதில் ரஷித் 60 ஓட்டங்கள் எடுத்தனர்.

இந்தியத் தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 108 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 391 ஓட்டங்கள் குவித்தது. கருண் நாயர் 71, முரளி விஜய் 17 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தார்கள்.

இன்றும் முதல் ஒரு மணி நேரம் இருவரும் கவனமாக ஆடி இந்திய அணியின் ஸ்கோர் 400 தாண்ட உதவினார்கள். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கருண் நாயர் இன்று தனது முதல் சதத்தை 185 பந்துகளில் பூர்த்தி செய்தார்.

இவர் சதம் எடுத்தபிறகு, அடுத்த ஓவரில் 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் முரளி விஜய். இந்திய அணி 126 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 437 ஓட்டங்கள் எடுத்து விளையாடிவருகிறது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

2nd T20: இலங்கையை மீண்டும் ஊதித்தள்ளிய இந்தியா! ஷெபாலி வர்மா 'சரவெடி' அரைசதம்!
பெங்களூரு சின்னசாமியில் விராட் கோலி ஆட்டம்.. ஆனால் ரசிகர்கள் பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா?