அவங்களா வந்து கேட்டா பரவாயில்ல.. நானா போயி சொல்ல முடியாது!! கட் அண்ட் ரைட்டா பேசிய கபில் தேவ்

By karthikeyan VFirst Published Dec 20, 2018, 3:56 PM IST
Highlights

கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது கடுமையான விமர்சனங்கள் ஏற்கனவே இருந்துவரும் நிலையில் இந்திய அணி தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் தோற்றுக்கொண்டு தான் இருக்கிறது. 

இந்திய அணி நம்பர் 1 டெஸ்ட் அணியாக திகழ்ந்தாலும் வெளிநாடுகளில் தொடர்ந்து தோல்வியை தழுவிவருகிறது. இந்திய வீரர்கள் வெளிநாட்டு தொடர்களில் தொடர்ந்து சொதப்பிவருகிறது. 

இந்திய அணியின் தோல்விக்கு வீரர்களின் ஆட்டத்திற்கு அப்பாற்பட்டு அணி தேர்வே முக்கிய காரணமாக திகழ்கிறது. சரியான மற்றும் சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்வதிலேயே அணி நிர்வாகமும் கேப்டன் மற்றும் பயிற்சியாளரும் கோட்டை விடுவதாக கவாஸ்கர் கருத்து தெரிவித்திருந்தார். 

கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது கடுமையான விமர்சனங்கள் ஏற்கனவே இருந்துவரும் நிலையில், ஆஸ்திரேலிய தொடரிலும் தோற்றுவிட்டால், அவர்களின் திறமையை மதிப்பீடு செய்வது அவசியம் என கவாஸ்கர் விளாசியுள்ளார். 

தற்போதைய இந்திய வீரர்கள், வெளிநாடுகளில் சிறந்து விளங்கிய முன்னாள் வீரர்களிடமிருந்து ஆலோசனைகளை பெறுவதில்லை. பயிற்சியாளர்கள் ஒருபுறமிருந்தாலும் வெளிநாட்டு தொடர்களில் சிறந்து விளங்கிய கவாஸ்கர், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் போன்ற முன்னாள் ஜாம்பவான்களிடமிருந்து ஆலோசனைகளை தற்போதைய வீரர்கள் பெறுவதில்லை. 

இதை ஏற்கனவே ஒருமுறை கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ரஹானேவை தவிர வேறு எந்த இந்திய வீரரும் தன்னிடம் பேட்டிங் குறித்து ஆலோசித்ததில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில், தற்போதைய இந்திய வீரர்களுக்கு பேட்டிங் ஆலோசனைகள் எதுவும் வழங்கியதுண்டா? என்று கபில் தேவிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கபில் தேவ், அவர்களாக எனது உதவியை நாடாதபோது நானாக சென்று ஆலோசனைகளை வழங்க முடியாது. அணியில் பெரிய வீரர்களாக வளர்ந்துவிட்டால் சிறப்பாக ஆட வேண்டியது அவர்களது பொறுப்பு. எந்த முன்னாள் வீரரும் அவர்களுக்கு உதவ வேண்டியதில்லை. நாங்கள் எல்லாருமே அவர்களுக்கு உதவ தயாராகவே இருக்கிறோம். ஆனால் அவர்களாக வந்து எங்களிடம் கேட்க வேண்டும். அப்படி கேட்டால்தான் எங்களால் ஆலோசனைகளை வழங்க முடியுமே தவிர நாங்களாக அவர்களது ஓய்வறையில் நுழைய முடியாது என்று நெற்றியில் அடித்தாற்போல் கூறிவிட்டார் கபில் தேவ். 
 

click me!