
இலங்கைக்கு எதிரான ரெண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 307 ஓட்டங்கள் எடுத்தது.
தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட் செய்தது.
ஹஷிம் ஆம்லா 15 ஓட்டங்கள், டி காக் 17 ஓட்டங்கள், கேப்டன் டிவில்லியர்ஸ் 3 ஓட்டங்கள், ஜே.பி.டுமினி 11 ஓட்டங்களில் வெளியேற, 108 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து நின்றது.
இதையடுத்து டூபிளெஸ்ஸிஸுடன் இணைந்தார் டேவிட் மில்லர். அசத்தலாக ஆடிய இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 117 ஓட்டங்கள் சேர்த்ததோடு, தென் ஆப்பிரிக்காவை வலுவான நிலைக்கு கொண்டு சென்றது.
டூபிளெஸ்ஸிஸ் 120 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 105 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
டேவிட் மில்லர் 98 பந்துகளில் 6 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 117 ஓட்டங்கள் குவித்தார்.
இதனால் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 307 ஓட்டங்கள் எடுத்து தனது ஆட்டத்தை முடித்தது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.