
18-வது ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 21 வீராங்கனைகளுடன் 51 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.
18-வது ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஜப்பான் ஜிபு நகரில் நடக்கவுள்ளது. வரும் ஜூன் 7 முதல் 10-ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடக்கின்றன.
இதில், நீண்ட ஓட்டப்பந்தய வீராங்கனை ஜிஸ்னா மேத்யூ, மும்முறை தாண்டுதல் வீரர் கமல்ராஜ் கனகராஜ், குண்டு எறிதல் ஆஷிஷ் பலோதியா, ஹாமர் எறிதலில் ஆசிஷ் ஜாக்கர் உள்பட 21 வீராங்கனைகள், 30 வீரர்கள் கொண்ட 51 பேர் அணி பங்கேற்கிறது.
இதுகுறித்து ஏஎஃப்ஐ செயலாளர் சி.கே.வல்சன், "ஜிபுவில் நடைபெறும் போட்டிகளில் இளம் வீரர்கள் அதிகளவில் உள்ளதால் கூடுதல் பதக்கம் பெற முடியும்" என்றும், "ஜிஸ்னா, கமல்ராஜ் கனகராஜ் ஆகியோர் தவறாமல் பதக்கம் வெல்வர் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது" என்றும் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.