நீங்க போட்டதுலாம் போதும்.. அதிரடி முடிவெடுத்த இங்கிலாந்து கேப்டன்

By karthikeyan VFirst Published Aug 20, 2018, 6:03 PM IST
Highlights

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடிவருகிறது. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 
 

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடிவருகிறது. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில், அணியில் 3 அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்கள் எடுத்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, ஹர்திக் பாண்டியாவின் பவுலிங்கில் வெறும் 161 ரன்களில் சுருண்டது. 

168 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி, ரன்களை குவிக்கும் முனைப்பில் தொடக்கம் முதலே அடித்து ஆடியது. ராகுல் மற்றும் தவான் ஆகியோர் முறையே 36 மற்றும் 44 ரன்களுக்கு அவுட்டாகினர். 

இதையடுத்து புஜாரா-கோலி ஜோடி ஆடிவருகிறது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் குவித்திருந்தது. மூன்றாம் நாளான இன்று, புஜாராவும் கோலியும் களமிறங்கினர். இன்றும் இருவரும் நிதானமாக ஆடினர். அதேநேரத்தில் ரன்களையும் குவித்தனர். 

சிறப்பாக ஆடிய இருவருமே அரைசதம் கடந்தனர். ஆண்டர்சன், பிராட், ஸ்டோக்ஸ் ஆகிய மூவரும் மாறி மாறி பந்துவீசியபோதும், கோலி-புஜாரா ஜோடி சிறப்பாக எதிர்கொண்டு இங்கிலாந்து பவுலர்களை சோதித்தது. கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதற்காகவே அணியில் சேர்க்கப்பட்ட அடில் ரஷீத்தின் ஸ்பின்னும் எடுபடவில்லை. 

எனவே அதிரடி முடிவெடுத்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், அவரே பந்துவீச வந்தார். அவரும் இரண்டு ஓவர்கள் வீசினார். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தமட்டில் அவ்வபோது பந்துவீசவே தெரியாத பேட்ஸ்மேன்களும் கூட பந்துவீசுவர். அதேபோலத்தான் ரூட்டும் வீசினார். இரண்டு ஓவர்களை வீசினார் ரூட். அனுபவ பவுலர்களாலேயே ஒன்றும் செய்ய முடியாத நிலையில், ரூட் என்ன செய்துவிடப்போகிறார்? அவரது ஆசைக்கு பந்துவீசினார். 

மூன்றாம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 54 ரன்களுடனும் புஜாரா 56 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி இதுவரை 362 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்னும் 8 விக்கெட்டுகள் கையில் இருக்கும் நிலையில், முடிந்தளவிற்கு அதிகமான ரன்களை குவிக்க வாய்ப்புள்ளது. அதிகமான இலக்கை இங்கிலாந்து அணிக்கு இந்திய அணி நிர்ணயிக்கும் என்பதால், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 
 

click me!