கால் இறுதிச் சுற்றில் கால் பதித்த ஜெயராம் மற்றும் கஷ்யப்…

Asianet News Tamil  
Published : Oct 15, 2016, 05:01 AM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
கால் இறுதிச் சுற்றில் கால் பதித்த ஜெயராம் மற்றும் கஷ்யப்…

சுருக்கம்

 

டச் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் கால் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் அஜய் ஜெயராம், பாருபள்ளி கஷ்யப் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

டச் ஓபன் பாட்மிண்டன் போட்டிகள் நெதர்லாந்தில் உள்ள அல்மேர் நகரில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் அஜய் ஜெயராம், வியாழக்கிழமை நடந்த 2-வது சுற்றுப் போட்டியில் பல்கேரியாவின் பிலிப் ஷிசோவை எதிர்கொண்டார்.

இப்போட்டியில் அவர் 21-7, 21-9 என்ற நேர் செட்களில் வென்று கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். கால் இறுதிப் போட்டியில் அவர் நார்வே நாட்டு வீரரான மரியஸ் மிரேவை எதிர்கொள்வார்.

வியாழக்கிழமை நடந்த மற்றொரு 2-வது சுற்றுப் போட்டியில் 11-ஆம் நிலை வீரரான இந்தியாவின் பாருப்பள்ளி கஷ்யப் 21-11, 7-21, 21-10 என்ற புள்ளிக்கணக்கில் டென்மார்க் வீரர் ராஸ்மஸ் கேம்கேவை கடுமையாக போராடி வென்றார். இப்போட்டி 50 நிமிடங்கள் நீடித்தது. கால் இறுதிப் போட்டியில் 6-ம் நிலை வீரரான எஸ்டோனியாவின் ராவுல் மஸ்டை எதிர்த்து ஆடவுள்ளார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Virat Kohli: 'இந்த குணம் என்னை விட்டு எப்போதும் போகாது'.. வெளிப்படையாக போட்டு உடைத்த விராட் கோலி!
Virat Kohli Retirement Date: விராட் கோலியின் ஓய்வு தேதி இதுதானா? 2027 உலகக்கோப்பை குறித்து அவரே சொன்ன தகவல்