உன் பந்தை தான் வெளு வெளு வெளுக்குறாங்க.. நீ கிளம்பு..! இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்

By karthikeyan VFirst Published Oct 29, 2018, 1:16 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 1-1 என தொடர் சமநிலை அடைந்துள்ளது. எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும். இன்றைய போட்டியில் வென்றால்தான் தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்குகின்றன. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

கோலியின் ஆஸ்தான ஸ்பின்னரான சாஹல் நீக்கப்பட்டு, ஆல் ரவுண்டர் ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு தீர்வாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட், சூழலுக்கு ஏற்ப ஆடாமல் அவசரப்பட்டு விக்கெட்டை பறிகொடுக்கிறார். கடந்த இரண்டு போட்டிகளிலும் அவர் சோபிக்கவில்லை. இந்திய அணியின் ஒரே பிரச்னை மிடில் ஆர்டர்தான். ராயுடு 4வது இடத்தில் ஓரளவிற்கு செட் ஆகிவிட்டார். எனவே 5வது இடத்தில் பொறுப்பாக ஆடும் வீரர் தேவை. அந்த இடத்தில் ஆட கிடைத்த அரிய வாய்ப்பை ரிஷப் தவறவிட்டார். 

எனவே இன்றைய போட்டியில் ரிஷப் நீக்கப்பட்டு ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு மாற்றங்களை தவிர வேறு எந்த மாற்றமும் அணியில் இல்லை.

நான்காவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், அம்பாதி ராயுடு, கேதர் ஜாதவ், தோனி(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், சாஹல், பும்ரா, கலீல் அகமது. 
 

click me!