ஐஎஸ்எல் அப்டேட்: கொல்கத்தாவை தோற்கடித்து வெற்றியை ருசித்தது புணே...

Asianet News Tamil  
Published : Nov 27, 2017, 09:41 AM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
ஐஎஸ்எல் அப்டேட்:  கொல்கத்தாவை தோற்கடித்து வெற்றியை ருசித்தது புணே...

சுருக்கம்

ISL update pune Taking victory over Kolkata

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் ஒன்பதாவது ஆட்டத்தில் எஃப்சி புணே சிட்டி அணி 4-1 என்ற கணக்கில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் ஒன்பதாவது ஆட்டம் எஃப்சி புணே சிட்டி அணி - அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் இடையே நடைப்பெற்றது.

இந்த ஆட்டத்தில் 13-வது நிமிடத்தில் புணே அணியின் எமிலியானோ அல்ஃபாரோவின் உதவியுடன் மார்செலோ பெரெய்ரா கோலடித்து முதல் கோல் வாய்ப்பை பெற்றார்.

பின்னர், 28-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ஸகின்ஹாவின் கோல் முயற்சியை தடுத்த புணே கோல் கீப்பர், அடுத்தடுத்த கொல்கத்தாவின் கோல் முயற்சிகளுக்கு தடுத்த வீரர்கள் தங்களது முன்னிலையை தக்க வைத்துக் கொண்டனர். இதன் காரணமாக முதல் பாதி நிறைவில் புணே 1-0 என முன்னிலையில் இருந்தது.

பின்னர் நடைப்பெற்ற 2-வது பாதி தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் கொல்கத்தா தனது கணக்கைத் தொடங்கியது. ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் அந்த அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை  கோலாக மாற்றினார் விபின் சிங். இதனால் ஆட்டம் சமன் ஆனது.

ஆனால், அதற்கான பதிலடியாக, அடுத்த நிமிடத்திலேயே புணே வீரர் ரோஹித் குமார் ஒரு கோல் அடித்து அணியை 2-1 என முன்னிலை பெறச் செய்தார். சகவீரர் பெரெய்ரா அடித்த கார்னர் கிக்கை, தலையால் முட்டி அவர் கோலடித்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் மார்செலோ பெரெய்ரா மீண்டும் ஒரு கோல் அடிக்க, புணே 3-1 என முன்னிலை பெற்றது. 80-ஆவது நிமிடத்தில் புணே வீரர் எமிலியானோ அல்ஃபாரோ ஒரு கோல் அடித்து அணியை மேலும் பலம் பெறச் செய்தார்.

இந்த நிலையில், கொல்கத்தாவின் கோல் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காததால் அந்த அணி 1-4 என்ற கணக்கில் தோற்றது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

விவாகரத்து, குடிக்கு அடிமை, பேனிக் அட்டாக்.. மீண்டு வந்த யுஸ்வேந்திர சாஹலின் கண்ணீர் கதை!
IND vs WI 5th T20: பெங்களூருவில் கொட்டித் தீர்த்த மழை.. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர் 2-2 என சமன்!