ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை - ஜாம்ஷெட்பூர் மோதிய விறுவிறுப்பான ஆட்டம் டிரா...

Asianet News Tamil  
Published : Feb 19, 2018, 11:25 AM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை - ஜாம்ஷெட்பூர் மோதிய விறுவிறுப்பான ஆட்டம் டிரா...

சுருக்கம்

isl Football Chennai - Jamshedpur match draw

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை - ஜாம்ஷெட்பூர் இடையே நடைப்பெற்ற விறுவிறுப்பான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

பத்து அணிகள் பங்கேற்றுள்ள 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழாவில் லீக் சுற்று இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

இதில் சென்னை நேரு மைதானத்தில் நேற்றிரவு நடந்த 76-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.

இதில், சென்னை வீரர்கள் வசம்தான் பந்து அதிக நேரம் இருந்தது. ஆனால், தடுப்பாட்டத்தை மேற்கொண்ட ஜாம்ஷெட்பூர் வீரர்கள், கோல் வாங்கிவிடக் கூடாது என்பதில் கவனமுடன் செயல்பட்டதால் சென்னை அணியின் பல முயற்சிகள் தடுக்கப்பட்டன.

32-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் வெலிங்டன் பிரியோரி கோல் அடித்து, இது இந்த சீசனில் அடிக்கப்பட்ட 200-வது கோல் ஆகும்.

பதிலடி கொடுக்க சென்னை வீரர்கள் தீவிரம் காட்டினர். அகஸ்டோ, செரனோ, மைல்சன் அடித்த ஷாட்டுகள் கம்பத்தை விட்டு விலகி சென்றன. 88-வது நிமிடம் வரை சென்னை அணியினரால் ஒரு பந்தை கூட துல்லியமாக இலக்கை நோக்கி அடிக்க முடியாத அளவுக்கு ஜாம்ஷெட்பூர் அணியின் தடுப்பு அரண் வலுவாக இருந்தது.

ஆனால், 89-வது நிமிடத்தில் சென்னை அணி கார்னரில் இருந்து மிஹெலிக் உதைத்த ஷாட்டை, சக வீரர் முகமது ரபி தலையால் முட்டி கோலாக்கினார். முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கணக்கில் கோல் சமனில் முடிந்தது.

இதுவரை சென்னை அணி 16 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 4 டிரா, 4 தோல்வி என்று 28 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

ஜாம்ஷெட்பூர் அணி 7 வெற்றி, 5 டிரா, 4 தோல்வியுடன் 26 புள்ளிகளை பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

WTC 2025-27 இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா? 3 முக்கிய விஷயங்கள்
ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து