ஐ.எஸ்.எல்: பெங்களூரு அணி கோல்கீப்பருக்கு இரண்டு ஆட்டங்களில் விளையாட தடை...

 
Published : Dec 06, 2017, 10:30 AM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
ஐ.எஸ்.எல்: பெங்களூரு அணி கோல்கீப்பருக்கு இரண்டு ஆட்டங்களில் விளையாட தடை...

சுருக்கம்

ISL Bangalore team banned to play in two matches for goalkeeper ...

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின்போது கோவா வீரரை முரட்டுத்தனமாக தள்ளிவிட்ட பெங்களூரு அணி கோல்கீப்பர் குர்பிரீத்சிங் சந்துக்கு அடுத்த இரண்டு ஆட்டங்களில் விளையாட தடை விதித்துள்ளது அகில இந்திய கால்பந்து சம்மேளன ஒழுங்கு நடவடிக்கை குழு.
 
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) போட்டியில் கோவாவில் கடந்த 30–ந் தேதி நடந்த 12–வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா–பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் 40–வது நிமிடத்தில் பெங்களூரு அணி கோல்கீப்பர் குர்பிரீத்சிங் சந்து, கோவா அணி வீரர் மானுல் லான்ஜரோட்டை முரட்டுத்தனமாக தள்ளி விட்டதால் அவர் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இதனால் பெங்களூரு அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த ஆட்டத்தில் கொச்சி அணி 4–3 என்ற கோல் கணக்கில் பெங்களூருவை வீழ்த்தி வெற்றிப் பெற்றது.

குர்பிரீத்சிங் சந்துவின் விதிமுறை மீறல் புகார் குறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளன ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது.

அந்த விசாரணையின் முடிவில் ஐ.எஸ்.எல். போட்டியில் அடுத்த இரண்டு ஆட்டங்களில் விளையாட குர்பிரீத்சிங் சந்துக்கு தடையும், ரூ.3 இலட்சம் அபராதமும் ஒழுங்கு நடவடிக்கை குழு விதித்துள்ளது.

"நடவடிக்கை முடிவு குறித்த தகவல் கிடைத்த பத்து நாள்களுக்குள் அபராத தொகையை அகில இந்திய கால்பந்து சங்கத்தில் செலுத்த வேண்டும் என்றும் அபராத தொகையை கட்ட தவறினால் விளையாட விதிக்கப்பட்ட தடை அடுத்த இரண்டு ஆட்டத்துக்கு பிறகும் தொடரும்" என்றும் அந்த குழு எச்சரித்துள்ளது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா