2 வருஷத்துக்கு பிறகு டி20 போட்டியில் களமிறங்கும் ஃபாஸ்ட் பவுலர்!!அதுவும் டெல்லி அணியின் கேப்டனாக..

Published : Feb 17, 2019, 01:36 PM IST
2 வருஷத்துக்கு பிறகு டி20 போட்டியில் களமிறங்கும் ஃபாஸ்ட் பவுலர்!!அதுவும் டெல்லி அணியின் கேப்டனாக..

சுருக்கம்

ஐபிஎல்லில் கடந்த 2017ம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அவர் ஆடியதுதான் கடைசி. கடந்த சீசன் மற்றும் வரப்போகும் சீசனில் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.   

உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் டெல்லி அணிக்கு இஷாந்த் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்திய அணியில் 2007ம் ஆண்டு அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, அறிமுகமான காலத்தில் அப்போது பீக்கில் இருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் உட்பட பல எதிரணி வீரர்களை தனது வேகப்பந்து வீச்சால் மிரட்டியவர். கடந்த 2016ம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் ஆடவில்லை. 

டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடிவருகிறார். டெஸ்ட் அணியின் பிரதான பந்துவீச்சாளராக திகழ்ந்துவருகிறார். ஐபிஎல்லில் கடந்த 2017ம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடியதுதான் கடைசி. கடந்த சீசன் மற்றும் வரப்போகும் சீசனில் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. 

இஷாந்த் சர்மா டி20 போட்டிகளில் ஆடி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்தாக் அலி தொடரில் ஆடுகிறார். வரும் 21ம் தேதி இத்தொடர் தொடங்குகிறது. இத்தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் இஷாந்த் சர்மா. 
 

PREV
click me!

Recommended Stories

நியூசிலாந்து அணியில் வேலூர் இளைஞர்.. ரஜினியின் வெறித்தனமான ரசிகர்.. யார் இந்த ஆதித்யா அசோக்!
IND vs NZ: கடைசி நேரத்தில் அதிரடி வீரர் விலகல்.. இந்திய அணிக்கு பின்னடைவு.. அட! மாற்று வீரர் இவரா?