கள்ளச் சந்தையில் ஐ.பி.எல் டிக்கெட் விற்பனை செய்த கல்லூரி மாணவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
CSK vs MI Tickets Black Market: Student Arrested by Chennai Police: உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் இன்று (மார்ச் 22) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. நாளை (மார்ச் 23) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த 19ம் தேதி நடந்தது.
ஐபிஎல் டிக்கெட் விற்பனை
www.chennaisuperkings.comஎன்ற சிஎஸ்கேவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தான் டிக்கெட் விற்பனை நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ரூ.1700 முதல் தொடங்கி ரூ.75000 வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அதாவது C/D/E Lowerகேலரிக்கு ரூ.1,700 டிக்கெட் நிர்ணயம் செய்யப்பட்டது. இதேபோல் 1/J/K Upperகேலரிக்கு 2,5000 ரூபாயும், 1/J/K Lowerகேலரிக்கு 4,0000 ரூபாயும், C/D/E Upperகேலரிக்கு 3,500 ரூபாயும், KMK Terraceகேலரிக்கு 7,500 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டது.
சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்
கடந்த 19ம் தேதி காலை 10.15 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. சேப்பாக்கம் மைதானம் 38,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் உள்ள நிலையில் அதில் பாதி டிக்கெட்டுகளே விற்பனைக்கு வந்ததால் ரசிகரக்ள் அதிர்ச்சி அடைந்தனர். முக்கியமான ஸ்டாண்டுகளில் இருந்து பார்க்கக் கூடிய டிக்கெட்டுகள் விற்பனைக்கே வரவில்லை என்றும் அவை ஸ்பான்சர்கள், ஐபிஎல் அணிகள், விஐபிக்கள், பிசிசிஐ நிர்வாகிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் நபர்கள்
இதனால் விரக்தி அடைந்த ரசிகர்கள் சிஸ்கே டிக்கெட் விற்பனையே ஒரு ஸ்கேம் என்றும் சிஸ்கே அணியை மீண்டும் தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். சிலர் அதிக விக்கெட்டுகளை வாங்கி கள்ளச்சந்தையில் பன்மடங்கு அதிக விலைக்கு விற்று வருவதாகவும் குற்ரம்சாட்டினார்கள். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த கல்லுரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கல்லூரி மாணவர் கைது
ஐபிஎல் டிக்கெட்டை சிலர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாக எழும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்பட்டை போலீசார் களமிறங்கிய நிலையில், போரூரில் தனியார் கல்லூரியில் படிக்கும் ஆனந்தராஜ்(20) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 20 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.