
டெல்லி மாநகராட்சி (எம்சிடி) தேர்தல் எதிரொலியின் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் ஆட்டங்களின் நேரத்தில் மாற்றப்பட்டு உள்ளன.
டெல்லி டேர்டெவில்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான ஆட்டம் டெல்லியில் ஏப்ரல் 22-ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெறுவதாக இருந்தது.
டெல்லியில் ஏப்ரல் 22-ஆம் தேதி மாநகராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால், அதையொட்டி அங்கு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் ஆட்டங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது திருத்தப்பட்டுள்ள புதிய அட்டவணையின்படி, டெல்லி டேர்டெவில்ஸ் தனது சொந்த மண்ணில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதும் ஆட்டம் ஏப்ரல் 22-ஆம் தேதியில் இருந்து, மே 6-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
மாறாக, மும்பை அணி தனது சொந்த மண்ணில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் மோதும் ஆட்டம் ஏப்ரல் 22-ஆம் தேதி இரவு 8 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.
மும்பை - டெல்லி ஆட்டத்தின் மாற்றம் காரணமாக, புணே - ஐதராபாத் இடையே ஏப்ரல் 22-ஆம் தேதி இரவு 8 மணிக்கு நடைபெறுவதாக இருந்த ஆட்டம், முன்கூட்டியே மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.