23-வது முறையாக மோதும் ஃபெடரர், வாவ்ரிங்கா; யாருக்கு வெற்றி?

Asianet News Tamil  
Published : Mar 20, 2017, 10:34 AM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
23-வது முறையாக மோதும் ஃபெடரர், வாவ்ரிங்கா; யாருக்கு வெற்றி?

சுருக்கம்

Federer hits 23th time vavrinka Who won

இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஸ்விட்சர்லாந்து வீரர்களான ரோஜர் ஃபெடரர் மற்றும் ஸ்டான் வாவ்ரிங்கா 23-வது முறையாக மோதுகின்றனர். வெற்றி யாருக்கு? என்ற எதிர்ப்பார்ப்போடு அனைவரும் காத்திருக்கின்றனர்.

இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின், முதல் அரையிறுதியில் உலகின் 3-ஆம் நிலை வீரரான ஸ்டான் வாவ்ரிங்கா ஸ்பெயினின் பாப்லோ கரீனோ பஸ்டாவை எதிர்கொண்டார்.

இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் வாவ்ரிங்கா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்றார்.

மற்றொரு அரையிறுதியில் உலகின் 10-ஆம் நிலை வீரரான ஃபெடரர், அமெரிக்காவைச் சேர்ந்தவரும், போட்டித் தரவரிசையில் 17-ஆவது இடத்தில் இருப்பவருமான ஜேக் சாக்கை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் 6-1, 7-6(4) என்ற செட் கணக்கில் ஃபெடரர் வெற்றி பெற்றார்.

இறுதிச் சுற்றில் மோதவுள்ள ஃபெடரரும், வாவ்ரிங்காவும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர்.

இதில் ஃபெடரர் 19 வெற்றிகளையும், வாவ்ரிங்கா 3 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ப்பா.. என்னா அடி.. சர்ஃபராஸ் கானை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்கணும்.. ஜாம்பவான் சப்போர்ட்!
டி20 உலகக் கோப்பையில் பெரிய அணிகளை பந்தாட ஆப்கானிஸ்தான் ரெடி.. ஸ்டிராங் டீம்.. அட! கேப்டன் இவரா?