
இந்திய குத்துச்சண்டை வீரர்களுக்கான பயிற்சியாளராக, சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் பயிற்சியாளர் குழு துணைத் தலைவரும், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவருமான சான்டியாகோ நீவா இன்று பொறுப்பேற்கிறார்.
முந்தைய பயிற்சியாளரும், கியூபாவைச் சேர்ந்தவருமான ஃபெர்னான்டஸ், கடந்த 2014-ஆம் ஆண்டு இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தற்போது பயிற்சியாளராக சான்டியாகோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு இன்று வரும் நீவா, இன்றே பாட்டியாலாவில் நடைபெறும் தேசிய பயிற்சி முகாமில் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
ஏஐபிஏ 3 நட்சத்திர பயிற்சியாளரான சான்டியாகோ, கடந்த ஆண்டு வரையில் ஸ்வீடன் ஆடவர் அணிக்கு பயிற்சி அளித்து வந்தார்.
இந்த நிலையில், ரியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு அந்தப் பொறுப்பில் இருந்து விலகினார்.
சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் பயிற்சியாளர் குழுவில் 2015-ஆம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.