
IPL; KKR scored 206 runs against Rajasthan: கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் மற்றும் இளம் பேட்ஸ்மேன் அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் கேகேஆர் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிக்கு எதிராக 20 ஓவர்களில் 206/4 ரன்கள் குவித்தது.
கொல்கத்தா அணி அதிரடி தொடக்கம்
டாஸ் வென்ற கேகேஆர் அணித் தலைவர் அஜின்க்யா ரஹானே முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்தார். சுனில் நரைன் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆர்ஆர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் முதல் ஓவரை சிக்கனமாக வீசியதைத் தொடர்ந்து, இரண்டாவது ஓவரில் யுத்வீர் சிங் சரக், நரைனை 9 பந்துகளில் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். ரஹானே குர்பாஸுடன் இணைந்து, பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு, பவர்பிளே முடிவில் கேகேஆர் அணியை 56/1 என்ற நிலைக்கு கொண்டு சென்றனர்.
குர்பாஸ், ரஹானே அவுட்
ஃபீல்டிங் கட்டுப்பாடுகளுக்குப் பிறகும் வேகம் தொடர்ந்தது, ஏழாவது ஓவரில் வனிந்து ஹசரங்காவின் ஓவரில் 11 ரன்கள் வந்தன. எட்டாவது ஓவரில் மஹீஷ் தீக்ஷனா குர்பாஸை 25 பந்துகளில் 35 ரன்களுக்கு (4 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) ஆட்டமிழக்கச் செய்தார். 13வது ஓவரில் ரியான் பராக், ரஹானேவை 24 பந்துகளில் 30 ரன்களுக்கு (2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி) ஆட்டமிழக்கச் செய்தார்.
ஆண்ட்ரே ரசல் அதிரடி
அதன்பிறகு ஆண்ட்ரே ரசல் ரகுவன்ஷியுடன் இணைந்தார். முதலில் மெதுவாக விளையாடிய ரசல் பின்பு அதிரடியில் வெளுத்துக் கட்டினார். ஆகாஷ் மத்வாலின் ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 15 ரன்கள் விளாசினார். ரசல் மற்றும் ரகுவன்ஷி நான்காவது விக்கெட்டுக்கு 31 பந்துகளில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின்னர் ரசல் தனது இறுதி ஓவரில் தீக்ஷனாவை மூன்று சிக்ஸர்கள் அடித்தார்.
ரிங்கு சிங் சிறப்பான ஆட்டம்
19வது ஓவரில் ஆர்ச்சர் திரும்பி வந்து ரகுவன்ஷியை 31 பந்துகளில் 44 ரன்களுக்கு (5 பவுண்டரிகள்) ஆட்டமிழக்கச் செய்தார். இதற்கிடையே ஆண்ட்ரே ரசல் வெறும் 22 பந்துகளில் சீசனின் முதல் அரைசதத்தை எட்டினார். அவரும் ரிங்கு சிங்கும் மத்வால் வீசிய இறுதி ஓவரில் 22 ரன்கள் குவித்தனர். ரசல் 25 பந்தில் 57 ரன்களுடனும், ரிங்கு சிங் 6 பந்தில் 19 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் அணி சார்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர், யுத்வீர் சிங், மஹீஷ் தீக்ஷனா மற்றும் ரியான் பராக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.