டெல்லியிடம் மண்டியிட்ட சென்னை…. சொதப்பிய தோனி டீம்….. 34 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வி….

Asianet News Tamil  
Published : May 19, 2018, 06:04 AM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
டெல்லியிடம் மண்டியிட்ட சென்னை…. சொதப்பிய தோனி டீம்….. 34 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வி….

சுருக்கம்

ipl cricket delhi dare devils beat chennai csk team

டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் அய்யர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ப்ரித்வி ஷா 17 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதைத் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்ட ரிஷப் பந்த் 26 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர், பந்த் இருவரையும் ஒரே ஓவரில் லுங்கி நிகிடி வீழ்த்தினார். அதன்பின் வந்த கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்னிலும், அபிஷோக் ஷர்மா 2 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க டெல்லி அணியின் ஸ்கோர் அப்படியே படுத்தது.

அதன்பின் வந்த விஜய் சங்கர், எச்.பட்டேல் தாக்குப்பிடித்து ஓரளவிற்கு ரன்கள் அடிக்க டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங் செய்தது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சன், ராயுடு ஆகியோர் களமிறங்கினர்.

இருவரும் நிதானமாக விளையாடினர். இதனால் 5 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 22 ரன்கள் மட்டுமே எடுத்தது. 6-வது ஓவரை அவேஷ் கான் வீசினார். அந்த ஓவரில் ராயுடு 3 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 22 ரன்கள் எடுத்தார். 

நிதானமாக விளையாடிய வாட்சன், அமித் மிஷ்ரா வீசிய 7-வது ஓவரின் 5-வது பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரெய்னாவுக்கு முதல் பந்திலேயே கேட்ச் மிஸ் செய்யப்பட்டது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ராயுடு 28 பந்தில் அரைசதம் அடித்தார். இதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். அரைசதம் அடித்த அடுத்த பந்திலேயே ராயுடு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் டோனி களமிறங்கினார். சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்தது.

டோனி, ரெய்னா இருவரும் நிதானமாக விளையாடினர். 14-வது ஓவரை டெல்லி அணியின் சந்தீப் லமிசானே வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே ரெய்னா ஆட்டமிழந்தார். அதன்பின் சாம் பில்லிங்ஸ் களமிறங்கினார். அமித் மிஷ்ரா வீசிய 15-வது ஓவரின் 3-வது பந்தில் பில்லிங்ஸ் ஆட்டமிழந்தார். 15 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்தது. 

18-வது ஓவரை போல்ட் வீசினார். அந்த ஒவரின் கடைசி பந்தில் டோனி ஆட்டமிழந்தார். அவர் 23 பந்தில் 17 ரன்கள் எடுத்தார். அவரைத்தொடர்ந்து பிராவோ களமிறங்கினார். அவர் போல்ட் வீசிய 20-வது ஓவரின் 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம் டெல்லி அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியின் ஹர்சல் பட்டேல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

சர்வதேச கிரிக்கெட்டில் அசாத்திய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா.. சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்
2 நாளில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டி.. ஒரே நாளில் 20 விக்கெட்.. மெல்போர்ன் பிட்ச் கியூரேட்டர் விளக்கம்!