
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த தோனி, தற்போதைய கேப்டன் கோலியின் கேப்டன்சி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு மூன்று விதமான சாம்பியன்ஷிப்பையும் வென்று கொடுத்தவர் தோனி. இதுவரை மூன்று விதமான சாம்பியன்ஷிப்பையும் வென்ற ஒரே கேப்டன் தோனி தான். சர்வதேச அளவில் வேறு எந்த கேப்டனும் இதை செய்ததில்லை. இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் தோனி.
தோனிக்கு பிறகு கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். கேப்டனாக இருந்த தோனி, தற்போது கோலியின் கேப்டன்சியின் கீழ் ஒரு சாதாரண வீரராக ஆடிவருகிறார். தோனி மற்றும் கோலி ஆகிய இருவரின் கேப்டன்சியும் முற்றிலும் முரணானது.
களத்தில் கோபமே படாமல், வீரர்களை ஊக்குவித்து ஆலோசனைகளை வழங்கி வெற்றியை வசப்படுத்துபவர் தோனி. அதனால்தான் இப்போதும் கேப்டன் கூல் என அழைக்கப்படுகிறார். ஆனால் கோலி ஆக்ரோஷமானவர். களத்தில் அதிகளவில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார். நிதானமான, கூலான கேப்டனின் இடத்தை ஆக்ரோஷமான கேப்டனை வைத்து பிசிசிஐ நிரப்பியது.
சில சமயங்களில் கோலியின் கேப்டன்சி குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. கோலியின் அணுகுமுறை, ஆதிக்கம் ஆகியவை குறித்தும் அவரது கேப்டன்சி குறித்தும் அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், சென்னை அணியின் வீரர்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில், கோலியின் கேப்டன்சி குறித்து தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி, அவர் ஒரு சிறந்த கேப்டன் என எளிமையாக பதிலளித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.