vuukle one pixel image
LIVE NOW

IPL 2025 LIVE Cricket Score Updates: வீல் சேரில் இருந்தாலும் சிஎஸ்கேவுக்காக விளையாடுவேன்! 'தல' தோனி பேட்டி! ரசிகர்கள் குஷி!

IPL 2025 Cricket today match csk vs mi and RR vs srh Ms dhoni Rohit hardik pandya KAKIPL 2025 Cricket today match csk vs mi and RR vs srh Ms dhoni Rohit hardik pandya KAK

ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மற்றொரு போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியோடு மோதுகிறது. 

11:13 PM

CSK vs MI IPL 2025 : கடைசியில் தோனியின் தரிசனம் ; கடைசி வரை சென்று வெற்றி பெற்ற சிஎஸ்கே!

IPL 2025 CSK vs MI: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி 2 பந்துக்கு தோனி களமிறங்கினார். அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. இறுதியாக வின்னிங் ஷாட்டாக ரச்சின் ரவீந்திரா சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்த வரையில் விக்னேஷ் புதுர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

வில் ஜாக்ஸ் மற்றும் தீபக் சாஹர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

Image

10:16 PM

CSK vs MI : சிஎஸ்கே நிதான தொடக்கம்; 8 ஓவர்களில் 79 ரன்கள் குவிப்பு!

IPL 2025 CSK vs MI : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ஓவர்கள் வரையில் 2 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்வாட் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

 

 

9:19 PM

CSK vs MI IPL 2025 : தீபக் சாஹரின் அதிரடியால் 155 ரன்களை எட்டிய மும்பை இந்தியன்ஸ்!

IPL 2025 CSK vs MI : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா 0 ரன்னுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 29 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

மும்பை இந்தியன்ஸ்:

திலக் வர்மா – 31 ரன்கள்

தீபக் சாஹர் – 28 ரன்கள் (நாட் அவுட்) (2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில்:

நூர் அகமது – 4 விக்கெட்டுகள் (4 ஓவர் 18 ரன்கள்)

கலீல் அகமது – 3 விக்கெட்டுகள் (4 ஓவர் 29 ரன்கள்)

ரவிச்சந்திரன் அஸ்வின் – 1 விக்கெட் (4 ஓவர் 31 ரன்கள்)

நேதன் எல்லீஸ் – 1 விக்கெட் (4 ஓவர் 38 ரன்கள்)

8:52 PM

IPL 2025 CSK vs MI : கிரிக்கெட் Commentator ஆக கலக்கிய யோகி பாபு!

CSK vs MI : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் நடிகர் யோகி பாபு கிரிக்கெட் கமெண்ட்டேட்டராக கலந்து கொண்டுள்ளார்.

 

 

8:45 PM

CSK vs MI : மும்பைக்கு ஆப்பு வைக்கும் சிஎஸ்கே - 15 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்த MI !

IPL 2025, CSK vs MI : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 3 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பாக பந்து வீசி வருகிறது. முதலில் பேட்டிங் செய்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா 0, ரியான் ரிக்கல்டன் 13, வில் ஜாக்ஸ் 11, சூர்யகுமார் யாதவ் 29, திலக் வர்மா 31 என்று ஒவொரு வரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

8:26 PM

SRH vs RR : கடைசி வரை போராடிய ராஜஸ்தான் ராயல்ஸ் – 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி!

Sanju Samson, SRH vs RR IPL 2025 : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில்

இம்பேக்ட் பிளேயர் சஞ்சு சாம்சன் 66 ரன்கள் எடுத்தார்.

துருவ் ஜூரெல் – 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஷிம்ரன் ஹெட்மயர் – 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

287 ரன்களை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் 242 ரன்கள் மட்டுமே எடுத்து 44  ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

7:12 PM

IPL 2025 CSK vs MI : டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு – மதீஷா பதிரனா இல்லை!

CSK vs MI IPL 2025 : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்கிறது. மும்பை அணியைப் பொறுத்த வரையில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியில் மதீஷா பதிரனா இடம் பெறவில்லை. அவர் இம்பேக்ட் பிளேயராக இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கலாம். ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம் பெற்றுள்ளார்.

6:58 PM

SRH vs RR : ராஜஸ்தானை துவம்சம் செய்த ஹைதராபாத் 286 ரன்கள் குவிப்பு; RRக்கு ஆட்டம் காட்டிய இஷான் கிஷன்!

IPL 2025 SRH vs RR : ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2025 தொடரின் 2ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இஷான் கிஷனின் அதிரடியால் 286 ரன்கள் குவித்தது.

மேலும் படிக்க


 

5:55 PM

Ishan Kishan : இஷான் கிஷன் அதிரடியால் 286 ரன்கள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

IPL 2025 SRH vs RR : ஐபிஎல் 2025 தொடரின் 2ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் குவித்துள்ளது. மேலும் ஒரு ரன்னில் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த 287 ரன்கள் தனது சாதனையை முறியடிக்க தவறிவிட்டது.

அதிகபட்சமாக ஹைதராபாத் அணியில் இணைந்த இஷான் கிஷன் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இஷான் கிஷன் அடித்த முதல் சதம் இதுவாகும். அவர் 47 பந்துகளில் 11 பவுண்டரி, 6 சிக்சர் உள்பட 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டிராவிஸ் ஹெட் 67 ரன்கள் எடுத்தார்.

ஹென்ரிச் கிளாசென் 34 ரன்கள் எடுத்தார்.

நிதிஷ் ரெட்டி 30 ரன்கள் எடுத்தார்.

அபிஷேக் சர்மா 24 ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில்

துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகள் கைப்பற்றனார். 3/44 (4 ஓவர்கள்)

மகீஷ் தீக்‌ஷனா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார் 2/52 (4 ஓவர்க்ள்)

சந்தீப் சர்மா ஒரு விக்கெட் எடுத்தார் 1/51 (4 ஓவர்கள்)

அதிக ரன்கள் குவித்த ஜோஃப்ரா ஆர்ச்சர் – 76 ரன்கள் (4 ஓவர்கள்)