ஹைதராபாத் - டெல்லி போட்டியின் சுவாரஸ்ய தகவல்கள்

First Published May 11, 2018, 11:52 AM IST
Highlights
interesting facts happened in srh vs delhi daredevils match


ஹைதராபாத் டெல்லி அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில் சில சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. சுவாரஸ்யமான சம்பவங்களும் நடந்துள்ளன.

டெல்லி ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து சீரான இடைவெளியில் இழந்தபோதிலும், ரிஷப் பண்ட்டின் அபார சதத்தால் டெல்லி 187 ரன்களை குவித்தது.

ஷிகர் தவான் - வில்லியம்சன் ஜோடியின் அபார ஆட்டத்தால் 18.5 ஓவரிலேயே இலக்கை எட்டி ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் எட்டப்பட்ட மைல்கற்கள் மற்றும் சுவாரஸ்ய தகவல்கள்:

1. ரிஷப் பண்ட் அடித்த சதம் - 128 ரன்கள்(63 பந்துகள்)

ஐபிஎல் தொடரில் இந்திய வீரர் எடுத்துள்ள அதிகமான ரன் இதுதான். ரிஷப் பண்ட்டிற்கு அடுத்தபடியாக 127 ரன்கள் எடுத்த முரளி விஜய் இரண்டாமிடத்தில் உள்ளார்.

2. இளம் வயதில் ஐபிஎல் சதம்:

நேற்றைய ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் சதமடித்தபோது, அவருக்கு 20 வயது முடிந்து 218 நாட்கள் ஆனது. இவர்தான் ஐபிஎல்லில் சதமடித்த இரண்டாவது இளம் வீரர். 

19 வயது முடிந்து 253 நாட்கள் ஆகியிருந்த சமயத்தில், 2009ம் ஆண்டு மனீஷ் பாண்டே அடித்தது தான் இளம் வீரரின் ஐபிஎல் சதமாக உள்ளது. இதையடுத்து இரண்டாவது இடத்தில் ரிஷப் பண்ட்டும், மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் முறையே சஞ்சு சாம்சன் மற்றும் டி காக்கும் உள்ளனர்.

3. ஹைதராபாத்துக்கு எதிரான அதிக ரன்கள் - ரிஷப் பண்ட்(128 ரன்கள்)

நேற்றைய ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் எடுத்த 128 ரன்கள் தான், அந்த அணிக்கு எதிராக தனிநபர் எடுத்த அதிக ரன். ரிஷப் பண்ட்டிற்கு அடுத்த இடங்களில் 104 ரன்களுடன் கெய்லும் 100 ரன்களுடன் மெக்கல்லமும் உள்ளனர்.

4. ஹைதராபாத் விரட்டி வென்ற அதிக இலக்கு:

டெல்லி நிர்ணயித்த 188 ரன்களை எட்டி ஹைதராபாத் வெற்றி பெற்றது. இரண்டாவது பேட்டிங்கில் ஹைதராபாத் அணி, விரட்டி வென்ற அதிகமான இலக்கு இதுதான். 

5. ஹைதராபாத் அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோர் - 176 ரன்கள் (ஷிகத் தவான் - வில்லியம்சன் ஜோடி)

6. தோற்ற அணியில் தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ஸ்கோர், நேற்று ரிஷப் பண்ட் அடித்த 128 ரன்கள் தான்.

இவ்வாறு இந்த ஒரே போட்டியில் பல சுவாரஸ்யங்கள் நடந்தன.
 

click me!