ஒரே விஷயத்தை 2 முறை செய்த 3 அணிகள்!! ஐபிஎல் சுவாரஸ்யம்

 
Published : May 28, 2018, 03:29 PM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
ஒரே விஷயத்தை 2 முறை செய்த 3 அணிகள்!! ஐபிஎல் சுவாரஸ்யம்

சுருக்கம்

interesting fact ipl history

ஐபிஎல் 11வது சீசனை சென்னை அணி வென்றுள்ளது. லீக் போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் இரண்டாமிடத்தில் இருந்த அணி, கோப்பையை வெல்வது இது 6வது முறையாகும்.

ஐபிஎல் 11வது சீசன் கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. மும்பை வான்கடே மைதானத்தில் சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் இடையே நடந்த இறுதி போட்டியில் ஹைதராபாத்தை வீழ்த்தி சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது.

இந்த சீசனில் லீக் போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருந்த ஹைதராபாத்தும் சென்னையும் இறுதி போட்டியில் மோதின. அதில், சென்னை அணி வெற்றி பெற்றது. இதன் மூலம், லீக் போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த அணி, கோப்பையை கைப்பற்றுவது இது 6வது முறையாகும்.

இதற்கு முன்னதாக புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த அணிகள், 5 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. 

லீக்கின் முடிவில் இரண்டாவது இடத்தில் இருந்து கோப்பையை வென்ற அணிகள்:

1. சென்னை சூப்பர் கிங்ஸ் - 2011, 2018

2. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 2012, 2014

3. மும்பை இந்தியன்ஸ் - 2013, 2015

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

பவுலர்களை துவம்சம் செய்த RO-KO கூட்டணி.. விஜய் ஹசாரே டிராபியில் சதம் விளாசி ரோகித்-விராட் அசத்தல்!
33 பந்துகளில் சதம் விளாசிய இஷான் கிஷன்.. சிக்சர் மழை.. ஒரே ஒரு பந்தில் மிஸ்ஸான வரலாற்று சாதனை!