
அதிகமான ஐபிஎல் போட்டிகளில் ஆடிய வீரர் என்ற பெருமையை சென்னை வீரர் சுரேஷ் ரெய்னா பெற்றுள்ளார்.
ஐபிஎல் 11வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை சென்னை அணி வென்றுள்ளது. வாட்சனின் அதிரடி சதத்தால், ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஆடியதன் மூலம், அதிகமான ஐபிஎல் போட்டிகளில் ஆடிய வீரர் என்ற பெருமையை தொடர்ந்து தக்கவைத்துள்ளார் சென்னை வீரர் ரெய்னா.
ஹைதராபாத்துக்கு எதிரான நேற்றைய இறுதி போட்டியுடன் சேர்த்து மொத்தம் 176 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ளார் சுரேஷ் ரெய்னா. 175 போட்டிகளில் ஆடியுள்ள தோனி, ரெய்னாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார்.
தொடர்ந்து ரெய்னா முதலிடம் வகிக்கிறார். அதிகமான போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பு வகித்த வீரராக தோனி திகழ்கிறார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.