
மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், அஜய் ஜெயராம் ஆகியோர் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், தரவரிசையில் முன்னணியில் உள்ள இந்தியாவின் சாய்னா நெவால், தாய்லாந்தின் சாசினி கோர்பாப்பை எதிர்கொண்டார்.
இதில், 21-9, 21-8 என்ற செட் கணக்கில் சாய்னா, வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல் ஆடவர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்திலுள்ள இந்திய வீரர் அஜய் ஜெயராம், தனது 2-ஆவது ஆட்டத்தில் 21-10, 17-21, 21-14 என்ற செட் கணக்கில் மலேசியாவின் ஜூன் ஹா லியாங்கை வீழ்த்தினார்.
அஜய் ஜெயராம், தனது அடுத்த ஆட்டத்தில் சீன தைபேயின் ஷு சுவானை எதிர்கொள்கிறார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் புதிதாக கைகோத்த இந்தியாவின் மனு அத்ரி - ஜூவாலா கட்டா இணை, இந்தோனேஷியாவின் லூஹி அப்ரி நுக்ரோஹோ - ரிரின் எமிலா இணையை 21-19, 21-18 என்ற செட் கணக்கில் தோற்கடித்தது.
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான அபர்ணா பாலன் - பிரஜகதா சாவந்த் 21-10, 21-11 என்ற செட் கணக்கில் இந்தோனேஷிய ஜோடியான அஹிஸ்னா ஃபத்குல் - அப்ரில்சசி புத்ரியை வெற்றி கொண்டது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.