
இந்தியா அசத்தல் வெற்றி : கோஹ்லி, கேதர் ஜாதவ் அதிரடி ஆட்டம்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராத் கோஹ்லி, கேதர் ஜாதவ் ஆகியோாின் அதிரடி ஆட்டத்தால் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது
முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 350 ரன்கள் குவித்தது. அந்த அணியில், ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர்.
அதிகபட்சமாக ஜோ ரூட் 78 ரன்கள் குவித்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 350 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
351 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. முன்னணி வீரர்கள் லோகேஷ் ராகுல், தவான், யுவராஜ் சிங், டோனி ஆகியோா் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனா்.
63 ரன்கள் எடுப்பதற்குள் இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்தது தடுமாறியது.
இதையடுத்து 5வது விக்கெட்டுக்கு கைகோர்த்த கேப்டன் விராத் கோலி-கேதர் ஜாதவ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கியது.
விராத் கோலி 122 ரன்களிலும், கேதர் ஜாதவ் 120 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது.
கடைசி நேரத்தில் பொறுப்பாக ஆடிய ஹர்த்திக் பாண்ட்யா, அஷ்வின் ஆகியோா் தலா ஒரு சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தனர்.
இந்திய அணி 48.1 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 356 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாண்ட்யா 40 ரன்களுடனும், அஷ்வின் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனா்.
இங்கிலாந்து அணி தரப்பில் ஜேக் பால் 3 விக்கெட்டுகளும், டேவிட் வில்லி மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.