
தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான (காதுகேளாதோர்) இளையோர், மிக இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் நவம்பர் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா, கேரளம், தில்லி, பஞ்சாப் உள்ளிட்ட 17 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.
தமிழகத்திலிருந்து 70 மாணவ, மாணவியர் அடங்கிய அணி பங்கேற்றது. தமிழக அணியில், திருப்பூரைச் சேர்ந்த 35 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில், தடகளம், பூப்பந்து, இறகுப்பந்து, வாலிபால் உள்ளிட்ட போட்டிகள் ஆடவர், மகளிருக்குத் தனித்தனியாக நடைபெற்றன. இளையோர், மிக இளையோர் பிரிவுகளில் 190 புள்ளிகள் பெற்று தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது.
திருப்பூரிலிருந்து தமிழக அணி சார்பில் பங்கேற்ற மாணவ, மாணவியர் தனி நபர் பிரிவில் 16 தங்கம் உள்பட 24 பதக்கங்களை வென்றனர். மேலும், அணி பிரிவு போட்டிகளிலும் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிகளில் பங்கேற்ற இம்மாணவர்கள் இரயில் மூலமாக திருப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனர். அவர்களுக்குத் திருப்பூர் மாவட்ட காதுகேளாதோர் விளையாட்டுச் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.