வரலாற்றுச் சாதனை பட்டத்தைத் தட்டிச் சென்றார் அதிதி…

Asianet News Tamil  
Published : Nov 15, 2016, 02:38 AM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
வரலாற்றுச் சாதனை பட்டத்தைத் தட்டிச் சென்றார் அதிதி…

சுருக்கம்

குர்கான்,

பெண்களுக்கான இந்திய ஓபன் கோல்ப் போட்டியில், ‘லேடிஸ் ஐரோப்பிய டூர்’ என்ற சிறப்பைப் பெற்று வரலாற்றுச் சாதனைப் பட்டத்தை அதிதி அசோக் தட்டிச் சென்றார்.

பெண்களுக்கான இந்திய ஓபன் கோல்ப் போட்டி குர்கானில் நடந்தது. பல்வேறு நாட்டு வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இந்தியாவின் அதிதி அசோக் மொத்தம் 213 (–3) புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

இதன் மூலம் ‘லேடிஸ் ஐரோப்பிய டூர்’ சிறப்பைப் பெற்ற போட்டி ஒன்றில் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையையும் நிகழ்த்தினார்.

பெங்களூருவைச் சேர்ந்த 18 வயதான அதிதி, இந்திய அணிக்காக ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றவர் ஆவார்.

இதே போல் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த உலக மணிலா மாஸ்டர்ஸ் கோல்ப் போட்டியில் இந்திய வீரர் எஸ்.எஸ்.பி.சாவ்ராசியா பட்டத்தை சொந்தமாக்கினார்.

கடும் சவாலாக விளங்கிய அமெரிக்காவின் சாம் சியான், மலேசியாவின் நிகோலஸ் பங் ஆகியோரை கடைசி கட்டத்தில் பின்னுக்கு தள்ளி அசத்திய 38 வயதான சாவ்ராசியா கொல்கத்தாவைச் சேர்ந்தவர். இந்தியாவுக்கு வெளியே அவரது முதல் ஆசிய டூர் பட்டமாக இது அமைந்தது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

டி20 உலகக் கோப்பை.. ஸ்ட்ராங் டீமை களம் இறக்கும் இங்கிலாந்து.. ஆர்ச்சர் ரிட்டன்..!
நியூசிலாந்து ஓடிஐ தொடரில் 2 இந்திய 'ஸ்டார்' வீரர்களுக்கு ஓய்வு.. ரசிகர்கள் ஷாக்.. பிசிசிஐ முடிவு!