2வது டி20: இந்தியா முதலில் பீல்டிங்; தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ! என்ன தெரியுமா?

By Rayar r  |  First Published Jan 25, 2025, 6:47 PM IST

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் நிலையில், இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது. 


இந்தியா-இங்கிலாந்து டி20 சீரிஸ்

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஓடிஐ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா இங்கிலாந்து இடையிலான 2வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. 

Latest Videos

இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் எந்தவித தயக்கமுமின்றி முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தார். இதனால் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்திய அணியில் இரண்டு  மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நிதிஷ்குமார் ரெட்டி, ரிங்கு சிங் ஆகியோருக்கு பதிலாக தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர், இளம் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் சேர்க்கப்பட்டுள்ளார். 

இரண்டு தமிழக வீரர்கள் 

சென்னை சேப்பாக்கம் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அக்சர் படேல் என 4 பிரதான ஸ்பின்னர்களுடன் இந்திய அணி விளையாடுகிறது. இதேபோல் அபிஷேக் சர்மாவும், திலக் வர்மாவும் ஸ்பின் வீசுவார்கள் என்பதால் இந்த ஆட்டத்தில் மொத்தம் 6 ஸ்பின்னர்கள் விளையாட இருக்கின்றனர். 

தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி என இரண்டு தமிழக வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்திய அணியில் தமிழக வீரர்கள் 2 பேர் விளையாடுவது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது. மேலும் இந்திய அணியின் பாஸ்ட் பவுலர் முகமது ஷமி இந்த போட்டியிலும் விளையாடவில்லை. 

முகமது ஷமி இல்லை 

2வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்ட்யா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய்.

இங்கிலாந்து அணியில் என்ன மாற்றம்?

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியிலும் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பெத்தேல், கஸ் அட்கின்சனுக்கு பதிலாக பிரைடன் கார்ஸ், ஜேம் ஸ்மித், அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜோஸ் பட்லர் (கேப்டன்), பென் டக்கெட், பில் சால்ட், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஓவர்டன், ஜேம் ஸ்மித், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத் மற்றும் மார்க் வுட்.

click me!