நீங்க ஆடி கிழிச்சதெல்லாம் போதும் கிளம்புங்க!! சொதப்பல் மன்னர்கள் அதிரடி நீக்கம்.. அகர்வால், ஹிட்மேனுக்கு வாய்ப்பு

By karthikeyan VFirst Published Dec 25, 2018, 10:12 AM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 1-1 என தொடர் சமநிலை அடைந்துள்ளது. எனவே மெல்போர்னில் வரும் 26ம் தேதி தொடங்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிதான் தொடரின் முடிவை தீர்மானிக்கப்போகும் போட்டி. அதனால் இரு அணிகளுமே இந்த போட்டியில் வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன.

தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களை போலவே ஆஸ்திரேலிய தொடரிலும் பவுலர்கள் அருமையாக பந்துவீசி 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றுகின்றனர். ஆனால் பேட்ஸ்மேன்கள் சொதப்புவதால்தான் வெற்றி பறிபோகிறது. குறிப்பாக தொடக்க வீரர்கள் ஒரு போட்டியில் கூட பொறுப்புடன் நிதானமாக ஆடி அடித்தளம் அமைத்து கொடுப்பதேயில்லை. தொடக்க வீரர்களின் சொதப்பல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆஸ்திரேலிய தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா காயத்தால் விலக, ராகுலும் முரளி விஜயும் படுமோசமாக சொதப்பிவிட்டனர். 

வெற்றி கட்டாயத்துடன் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணி, ஆடும் லெவனில் அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. தொடர்ந்து சொதப்பிவரும் ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு மயன்க் அகர்வாலும் ரோஹித் சர்மாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மயன்க் அகர்வால் நாளைய போட்டியில்தான் அறிமுகமாகிறார். கும்ப்ளே உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் ராகுல் மற்றும் முரளி விஜயை நீக்கிவிட்டு அகர்வாலுடன் விஹாரியை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ரோஹித்தும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதால் மயன்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக யார் இறங்குவார் என்பது கேள்வியாக உள்ளது. ஹனுமா விஹாரி இறங்குவதற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது. 

அதேபோல வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவிற்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் இந்திய அணியில் ஸ்பின்னர் இல்லாதது தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் மெல்போர்ன் டெஸ்டில் ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மூன்று மாற்றங்களையும் தவிர மற்றபடி அதே அணிதான். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), மயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி, புஜாரா, ரஹானே(துணை கேப்டன்), ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா. 
 

click me!