ராகுல் நல்லா ஆடுனாலும் ஆடலைனாலும் அணியில் நிரந்தர இடம்!! இதுதான் காரணம்

By karthikeyan VFirst Published Oct 16, 2018, 3:26 PM IST
Highlights

ஓரிரு டெஸ்ட் போட்டிகளில் சரியாக ஆடாவிட்டாலே மற்ற வீரர்களை அணியிலிருந்து நீக்கும் நிலையில், ராகுல் மட்டும் சரியாக ஆடாவிட்டாலும் தொடர்ந்து அணியில் இடம்பிடித்து விடுகிறார். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து பார்ப்போம். 
 

ஓரிரு டெஸ்ட் போட்டிகளில் சரியாக ஆடாவிட்டாலே மற்ற வீரர்களை அணியிலிருந்து நீக்கும் நிலையில், ராகுல் மட்டும் சரியாக ஆடாவிட்டாலும் தொடர்ந்து அணியில் இடம்பிடித்து விடுகிறார். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து பார்ப்போம். 

இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரர் ராகுல், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலுமே சரியாக ஆடவில்லை. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சரியாக ஆடாத முரளி விஜய் அணியிலிருந்து நீக்கப்பட்டார். தவான் சரியாக ஆடாததால் இடையில் ஒரு போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். புஜாரா கூட ஒரு இங்கிலாந்தில் ஒரு போட்டியில் ஆடவில்லை. 

ஆனால் இங்கிலாந்தில் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் ஆட வாய்ப்பு பெற்றார் ராகுல். கடைசி போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டுமே சதமடித்தார். மற்ற ஒரு இன்னிங்ஸில் கூட சரியாக ஆடாத ராகுல், முழுமையாக வாய்ப்பு பெற்றார். அதேநேரத்தில் ஒரு போட்டியில் கூட கருண் நாயருக்கு ஆட வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

இங்கிலாந்து சூழலில் ஆடுவது கடினம்; சரி அங்கு தான் சரியாக ஆடவில்லை, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் நன்றாக ஆடுவார் என்று பார்த்தால், அதிலும் சொதப்பிவிட்டார் ராகுல். ஆனாலும் முதல் போட்டியில் டக் அவுட்டான ராகுல், இரண்டாவது போட்டியில் சேர்க்கப்பட்டாரே தவிர, போதிய அளவு திறமையை நிரூபித்து வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கும் மயன்க் அகர்வாலுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இவ்வாறு ராகுல் சரியாக ஆடாவிட்டாலும், அவருக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு கொண்டே இருக்கிறது. அதற்கு கேப்டன் விராட் கோலி மற்றும் அணி நிர்வாகம் ராகுலின் திறமை மீது வைத்திருக்கும் நம்பிக்கை மிக முக்கிய காரணம். ராகுல் மீது அப்படியான நம்பிக்கை வைத்து அவருக்கு வாய்ப்பு வழங்க என்ன காரணம் என்பதை கோலியின் பேச்சு உணர்த்துகிறது. 

ராகுல் குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ராகுல் செய்யும் தவறுகளை களைந்து சிறப்பாக ஆட வேண்டும் என்பது உண்மைதான். நானும் அதில் உடன்படுகிறேன். ஆனால் அவரது உடல்மொழியும் ஆட்டமும் சிறப்பாக உள்ளது. அவரது தவறை எடுத்துக்கூறுவது யாராக இருந்தாலும் அதை உள்வாங்கிக்கொண்டு திருத்த முயல்வதோடு, அவர்களை மேலும் தனது தவறுகளை சுட்டிக்காட்ட அவரே ஊக்குவிக்கிறார். அது மிகச்சிறந்த குணம். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் சிறிது நேரம் களத்தில் நின்று ஆடினார். அது பார்க்க நன்றாக இருந்தது. அவர் அதேபோன்று தொடர்ந்து ஆடுவார் என்று நம்புவதாக கோலி தெரிவித்தார். 
 

click me!