டென்னிஸ் போட்டியில் அர்ஜெண்டீனா ஜோடியை வென்று இந்திய ஜோடி கொக்கரிப்பு…

Asianet News Tamil  
Published : May 05, 2017, 12:40 PM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
டென்னிஸ் போட்டியில் அர்ஜெண்டீனா ஜோடியை வென்று இந்திய ஜோடி கொக்கரிப்பு…

சுருக்கம்

Indian pair win over pair in tennis match

எஸ்டோரில் ஓபன் டென்னிஸ் போட்டியின் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பிரேசிலின் ஆண்ட்ரே சா இணை,. அர்ஜெண்டீனாவின் ரென்ஸா ஆலிவோ - பிரான்ஸின் பெனாய்ட் பேர் இணையைத் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

எஸ்டோரில் ஓபன் டென்னிஸ் போட்டி போர்ச்சுகலின் எஸ்டோரில் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பிரேசிலின் ஆண்ட்ரே சா இணை தங்களின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அர்ஜென்டீனாவின் ரென்ஸா ஆலிவோ - பிரான்ஸின் பெனாய்ட் பேர் இணையுடன் மோதினர்.

இதில், 7-6 (1), 6-2 என்ற நேர் செட் கணக்கில் இந்திய இணை, அர்ஜெண்டீனா இணையை வீழ்த்தியது.

பயஸ் - ஆண்ட்ரே சா இணை தங்களின் காலிறுதியில் ஸ்பெயினின் நிகோலஸ் அல்மாக்ரோ - கார்ஸியா லோபஸ் இணையுடன் மோதுகின்றனர்.

இதேபோல் இந்தியாவின் திவிஜ் சரண் - பூரவ் ராஜா இணை தங்களின் முந்தைய சுற்றில் நியூஸிலாந்தின் மார்கஸ் டேனியல் - பிரேசிலின் மார்செலோ டெமோலினர் இணையை எதிர்கொண்டது.

இதில், 6-0, 7-6 (4) என்ற நேர் செட்களில் நியூசிலாந்து இணையை இந்திய அணி தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

திவிஜ் - பூரவ் இணை தங்களின் காலிறுதியில் உருகுவேயின் ஆரில் பெஹார் - பெலாரஸின் அலெக்சாண்டர் இணையுடன் மோதுகிறது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Record Chase: 265 ரன் டார்கெட்... மிரட்டி சேஸ் செய்த பஞ்சாப்..! T20 வரலாற்றில் புதிய சாதனை..!
KL Rahul: பஞ்சாப் பௌலர்களை பந்தாடிய ராகுல்..! 152 ரன்கள் விலாசி இமாலய சாதனை..