35 பந்துகளில் அதிவேகமாக சதம் அடித்த ரோகித்...! டி-20 போட்டியில் அசத்தல்...!

 
Published : Dec 22, 2017, 08:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
35 பந்துகளில் அதிவேகமாக சதம் அடித்த ரோகித்...! டி-20 போட்டியில் அசத்தல்...!

சுருக்கம்

Indian cricketer Rohit Sharma has climbed to 35 in the second T20 cricket match against Sri Lanka.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் 35 பந்துகளில் சதமடித்து அதிரடி கிளப்பியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா.

இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட இந்தியா வந்துள்ளது. 

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்று கணக்கில் தொடரை வென்றது. தற்போது ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இந்தியா ஒருநாள் தொடரை 2-1 என்று கணக்கில் வென்றது.

கட்டாக்கில் நடந்த முதல் டி-20 போட்டியில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி தற்போது மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள 'ஹோல்கர்' மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இலங்கை டாஸ் வென்று, பந்து வீச முடிவு செய்தது.

இந்நிலையில், டி-20 கிரிக்கெட் போட்டியில் 35 பந்துகளில் சதமடித்து அதிரடி கிளப்பியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா. அதில் 8 சிக்சர்களும் 11 பவுண்டரிகளும் அடங்கும். 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு
T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி