டெல்லி அணியிடமிருந்து ஆல்ரவுண்டரை தட்டி தூக்கிய மும்பை இந்தியன்ஸ்!!

By karthikeyan VFirst Published Dec 21, 2018, 10:40 AM IST
Highlights

ஐபிஎல் ஏலத்தில் லசித் மலிங்கா, யுவராஜ் சிங் ஆகிய இரண்டு சீனியர் வீரர்களையும் வாங்கியது. மேலும் பங்கஜ் ஜெய்ஸ்வால், ரசிக் தர், அன்மோல்பிரீத் சிங் மற்றும் பரீந்தர் ஸ்ரான் ஆகிய இளம் வீரர்களையும் ஏலத்தில் எடுத்தது. 
 

ஐபிஎல் 12வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. அதற்கான வீரர்கள் ஏலம் கடந்த 18ம் தேதி ஜெய்ப்பூரில் நடந்தது. 

வீரர்கள் ஏலம் முடிந்த பிறகும் அணியை வலுப்படுத்தும் வேட்கை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தணியவில்லை. ஏலத்திற்கு முன்னதாகவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடமிருந்து தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக்கை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. 

ஏலத்தில் லசித் மலிங்கா, யுவராஜ் சிங் ஆகிய இரண்டு சீனியர் வீரர்களையும் வாங்கியது. மேலும் பங்கஜ் ஜெய்ஸ்வால், ரசிக் தர், அன்மோல்பிரீத் சிங் மற்றும் பரீந்தர் ஸ்ரான் ஆகிய இளம் வீரர்களையும் ஏலத்தில் எடுத்தது. 

மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த சீசனில் நிலவிய மிடில் ஆர்டர் பிரச்னைக்கு தீர்வாக யுவராஜ் சிங்கை எடுத்துள்ளது. அணியில் அனுபவ வீரர்கள் குறைவாக இருந்த நிலையில் யுவராஜ் சிங், மலிங்கா ஆகியோரை அணியில் எடுத்து அந்த குறையை நீக்கியது. 

ஏலம் முடிந்த பிறகும் அணியை வலுப்படுத்தும் வேட்கை மும்பை இந்தியன்ஸிடம் தணியவில்லை. கிடைக்கும் வீரர்களை எல்லாம் வாரி குவித்துவருகிறது. டெல்லி கேபிடள்ஸ் அணியிடமிருந்து ஆல்ரவுண்டர் ஜெயந்த் யாதவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. ஜெயந்த் யாதவ் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்படக்கூடியவர். ஐபிஎல்லில் மெச்சும்படியான ஆட்டத்தை ஆடாதபோதிலும் சிறந்த வீரர் இவர். 

10 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ள ஜெயந்த் யாதவ் பேட்டிங் ஆடிய கிடைத்த வாய்ப்பில் வெறும் 6 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அவருக்கு பெரிதாக பேட்டிங் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஜெயந்த் யாதவ் இந்திய அணிக்காகவும் ஆடியுள்ளார். இந்திய அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஜெயந்த், ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 228 ரன்கள் அடித்துள்ளதோடு 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

மும்பை இந்தியன்ஸ் அணியில் பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா ஆகிய ஆல்ரவுண்டர்கள் இருந்த நிலையில், தற்போது ஜெயந்த் யாதவ் கூடுதல் ஆல்ரவுண்டராக கிடைத்துள்ளார். 

click me!