தென் ஆப்பிரிக்காவை தெறிக்கவிட்ட கோலி டீம்…. ஒன் டே தொடரை கைப்பற்றி இந்தியா வரலாற்றுச் சாதனை !!

 
Published : Feb 14, 2018, 06:37 AM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
தென் ஆப்பிரிக்காவை தெறிக்கவிட்ட கோலி டீம்…. ஒன் டே தொடரை கைப்பற்றி இந்தியா வரலாற்றுச் சாதனை !!

சுருக்கம்

India win s.africa in 5th one day cricket

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 5 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் மார்கிராம் பவுலிங் தேர்வு செய்தார்.

தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் சர்மா நிதானமாக விளையாட தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் 23 பந்தில் 8 பவுண்டரியுடன் 34 ரன்கள் எடுத்து ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார்.



அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா 50 பந்தில் அரைசதம் அடித்தார். விராட் கோலி 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன்அவுட் ஆனார். அடுத்து வந்த ரகானேவும் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.

4-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மாவுடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். ரோகித் சர்மா தனது 17-வது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 107 பந்தில் சதம் அடித்தார். அவர் 126 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் 115 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து  இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் சேர்த்தது. இதனால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாசிம் அம்லாவும், எய்டன் மார்க்ரமும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன் குவித்தனர். மார்க்ரம் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டுமினி 1 ரன்னிலும், டி வில்லியர்ஸ் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் அம்லா உடன் மில்லர் ஜோடி சேர்ந்தார்.



சிறப்பாக விளையாடிய அம்லா அரைசதம் கடந்தார். மில்லர் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சஹால் பந்தில் போல்டாகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து ஹெய்ன்ரிச் கிளாசென் களமிறங்கினார். நிதானமாக விளையாடிய அம்லா 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பின் களமிறங்கியவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

பெலுக்வாயோ ரன் எடுக்காமலும், ரபாடா 3 ரன்னிலும், கிளாசென் 39 ரன்னிலும், ஷம்சி ரன் எடுக்காமலும், மோர்னே மார்கல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் தென்ஆப்ரிக்கா அணி 201 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன்மூலம் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

தென்ஆப்ரிக்கா மண்ணில் இந்திய அணி ஒருநாள் தொடரை வெல்வது இதுவே முதல் முறை.  இந்த வெற்றியின் மூலம் ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான ஆறாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 16-ம் தேதி நடைபெறுகிறது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா