
தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான 5 வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசினார்.
6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. தொடரை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி போர்ட் எலிசபெத்தில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் மெதுவாக ஆடினாலும் மூன்றாவது ஓவருக்கு மேல் இருவரும் அடித்து ஆட தொடங்கினர்.
அதிலும் தவான் எல்லா பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்புவதிலேயே குறியாக இருந்தார். தவான் எதிர்கொண்ட பெரும்பாலான பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினார். ஆனால் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா பவுலிங்கில் தவான் பெவிலியன் திரும்பினார்.
இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள 4 போட்டிகளில் வெறும் 40 ரன்கள் மட்டுமே எடுத்து திணறிவந்த ரோஹித், இந்த போட்டியில் சற்று நிதானமாக ஆடினார். 4 போட்டிகளில் 3 முறை ரபாடாவின் பந்துவீச்சில் அவுட்டாகியுள்ளார் ரோஹித்.
நடப்பு தொடரில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் என ரோஹித் ஆடியுள்ள 8 இன்னிங்ஸ்களில் 6 முறை ரபாடா பந்துவீச்சில் அவுட்டாகியுள்ளார்.
இந்த முறையும் ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்த ரபாடா ஆர்வம் காட்டினார். ஆனால், மிகவும் கடினமாக ஆடிய ரோஹித், வழக்கம்போல இந்தமுறை விக்கெட்டை பறிகொடுக்கவில்லை.
இந்நிலையில், தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான 5 வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசியுள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.