ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இடம் பெற்றது இந்தியா...

Asianet News Tamil  
Published : Apr 27, 2018, 11:21 AM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இடம் பெற்றது இந்தியா...

சுருக்கம்

India to host Asian Cup football tournament

 பதினாறு வயதுக்கு உட்பட்டோருக்கான ஏ.எப்.சி ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான், வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.

பதினாறு வயதுக்கு உட்பட்டோருக்கான ஏ.எப்.சி ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிச்சுற்று மலேசியாவில் வரும் செப்டம்பர் மாதம் நடக்கிறது. 

இதற்கான அணிகள் குலுக்கல் நேற்று நடைபெற்றது.

கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த தகுதிப் போட்டியில் இந்திய சிறுவர் அணி தேர்வு பெற்றது.

கடந்த இறுதிச் சுற்று போட்டிகள் கோவாவில் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிபியனோ பெர்ணான்டஸ், "ஓரே நேரத்தில் ஒரு போட்டியில் அணி பங்கேற்கும்.

வலுவான அணிகளுடன் இந்தியா டிரா செய்துள்ளது.

அரையிறுதிக்கு தகுதி பெறுவதே முதல் நோக்கமாகும்.

சிறுவர்கள் திறனை மேம்படுத்த ஏஐஎப்எப் கடுமையாக செயலாற்றி வருகிறது" என்று தெரிவித்தார்.  

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs NZ 5-வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு இடம்.. பயிற்சியாளர் சொன்ன முக்கிய அப்டேட்!
திடீரென முடங்கிய விராட்டின் இன்ஸ்டா அக்கவுண்ட்.. அனுஷ்கா ஷர்மாவின் கமெண்ட்ஸ் பேஜில் கதறும் ரசிகர்கள்..