
இந்தியா-இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், பேட்டிங்கில் தடுமாறிய இந்திய அணி, 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சி அளித்தது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி, 294 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவாணும் கே.எல்.ராகுலும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். தவாண் 94 ரன்களும் ராகுல் 79 ரன்களும் எடுத்தனர். முதல் இன்னிங்சில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறிய கேப்டன் கோலி, இந்த இன்னிங்சில் அதிரடியாக ஆடி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 18வது சதத்தை பூர்த்தி செய்தார். 8 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்திய அணி டிக்ளேர் செய்தது.
இதையடுத்து 231 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சமரவிக்ரமா, கருணாரத்னே ஆகியோர் முறையே புவனேஷ்குமார், ஷமி பந்துவீச்சில் வெளியேறினர். அதன்பின்னர், சிறிதுநேரம் நிலைத்த மேத்யூஸை உமேஷ் யாதவும் திரிமன்னேவை புவனேஷ்குமாரும் வெளியேற்றினர்.
இப்படி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்துவந்த இலங்கை அணி, 26.3 ஓவரின் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் மட்டுமே எடுத்தது. புவனேஷ்குமாரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், திணறிய இலங்கை அணி, அவரிடம் மட்டுமே 4 விக்கெட்டுகளை இழந்தது.
வெற்றியை நெருங்கிய இந்திய அணி, வெளிச்சமின்மை காரணமாக வெற்றியை நழுவவிட்டது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.