இந்தியாவின் அடுத்த இலக்கு தென் ஆப்பிரிக்கா; ஜனவரியில் ஆட்டம் ஆரம்பம்…

 
Published : Sep 22, 2017, 11:17 AM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
இந்தியாவின் அடுத்த இலக்கு தென் ஆப்பிரிக்கா; ஜனவரியில் ஆட்டம் ஆரம்பம்…

சுருக்கம்

India next goal is South Africa The game begins in January ...

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள், ஆறு ஒரு நாள் ஆட்டங்கள், மூன்று டி20 ஆட்டங்களில் மோதுகிறது.

முன்னதாக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்திய அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் ஜனவரி 5-ஆம் தேதி தொடங்குகிறது. 

பிசிசிஐ செயலர் அமிதாப் செளத்ரி நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்,. அதில், 'மகாத்மா காந்தி - நெல்சன் மண்டேலா' பெயரில் நடைபெறும் இந்தத் தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகள் இடம் பெறுகின்றன.

அதனைத் தொடர்ந்து ஆறு ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரும், மூன்று ஆட்டங்கள் கொண்ட டி-20 தொடரும் நடைபெறவுள்ளன.

போட்டி நடைபெறும் தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்தத் தொடருக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்காவில் 10 நாள்கள் பயிற்சியில் ஈடுபடவுள்ளது இந்தியா. அப்போது ஒரு பயிற்சி ஆட்டமும் நடைபெறவுள்ளது.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு
T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி