வாங்கியதை திருப்பி கொடுத்து வரலாறு படைக்குமா இந்தியா..?

 
Published : Feb 13, 2018, 03:56 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
வாங்கியதை திருப்பி கொடுத்து வரலாறு படைக்குமா இந்தியா..?

சுருக்கம்

india is looking forward a historical win against south africa

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. 

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-1 என இழந்தது. 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-1 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.

ஐந்தாவது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத்தில் இன்று நடக்கிறது. நான்காவது போட்டியில் மழை மற்றும் மில்லருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளால் வெற்றியை இழந்த இந்திய அணி, இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.

இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், அது வரலாற்று வெற்றியாக அமையும். இதுவரை தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றதே கிடையாது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை வெல்லும். அதன்மூலம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக இது அமையும்.

கடந்த போட்டியில் தோல்வியுற்றதால், இந்த போட்டியில் அதை திருப்பி கொடுக்க வேண்டும் என்பதில் இந்திய அணி உறுதியாகவும் தெளிவாகவும் உள்ளது.

எனவே தென்னாப்பிரிக்காவில் முதல் ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா களமிறங்குகிறது. அதேநேரத்தில், சொந்த மண்ணில் தொடரை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு தொடரை வெல்லும் வாய்ப்பு இல்லாத நிலையில், இந்தியா வெல்ல முடியாத அளவிற்கு சமன் செய்ய வாய்ப்புள்ளது.

வரலாற்று வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா