அகமதாபாத் மாஸ்டர்ஸ் அணியில் இந்தியாவின் ஹெ.எஸ்.பிரணாய், தைபேவின் தை ஸு யிங் இடம்பிடிப்பு...

 
Published : Dec 02, 2017, 10:30 AM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
அகமதாபாத் மாஸ்டர்ஸ் அணியில் இந்தியாவின் ஹெ.எஸ்.பிரணாய், தைபேவின் தை ஸு யிங் இடம்பிடிப்பு...

சுருக்கம்

India HS pranai Taipe s Dhu Yi Ying Spot in Ahmedabad Masters

ப்ரீமியர் பாட்மிண்டன் லீக் போட்டியில் முதல்முறையாக அறிமுகமாகும் அகமதாபாத் மாஸ்டர்ஸ் அணியில் இந்தியாவின் ஹெ.எஸ்.பிரணாய், உலக தரவரிசையில் மகளிர் பிரிவில் முதலிடத்தில் இருக்கும் தைபேவின் தை ஸு யிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மூன்றாவது ப்ரீமியர் பாட்மிண்டன் லீக் போட்டியில் இம்மாதம் 23-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 14-ஆம் தேதி வரை குவாஹாட்டி, டெல்லி, லக்னௌ, சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன.

இந்தாண்டு  அறிமுக அணியாக அகமதாபாத் மாஸ்டர்ஸும், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணிகளும் களமிறங்கவுள்ளன. இந்த அணிகளுக்காக, உலகின் முன்னணி வீரர்கள் பலர் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.

உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் ஹெ.எஸ்.பிரணாய், ரூ.62 இலட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அடுத்தபடியாக அவாதே வாரியர்ஸ் அணிக்காக ஸ்ரீகாந்த் ரூ.56 இலட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்படடார்.

போட்டியில் பங்கேற்கவுள்ள பெங்களூரு மாஸ்டர்ஸ், சென்னை ஸ்மாஷர்ஸ், ஐதராபாத் ஹண்டர்ஸ், டெல்லி ஏசர்ஸ், மும்பை ராக்கெட்ஸ் ஆகிய இதர அணிகளிலும் முன்னணி வீரர், வீராங்கனைகள் ஏலம் மூலம் எடுக்கப்பட்டனர். ஏற்கெனவே அந்த அணியில் இருக்கும் வீரர்கள் தொடர்ந்து இந்த ஆண்டும் நீடிக்கின்றனர்.

இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகளான பி.வி.சிந்து சென்னை ஸ்மாஷர்ஸ் அணியிலும், சாய்னா நெவால் அவாதே வாரியர்ஸ் அணியிலும் தொடர்ந்து நீடிக்கின்றனர்.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா