அஸ்வினை விட ஹர்பஜன் சிங் தான் சிறந்த அட்டாக் ஸ்பின்னர்..! ஹெய்டன் அதிரடி..!

First Published Dec 1, 2017, 4:02 PM IST
Highlights
harbhajan better than aswin said mathew hayden


ஹர்பஜன் சிங் அளவுக்கு அஸ்வின் தாக்குதல் ஸ்பின்னர் கிடையாது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

இந்திய சுழல் மன்னன் அஸ்வின், குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மேத்யூ ஹைடன், புள்ளிவிவரங்கள் பொதுவாக பொய்த்தோற்றத்தையே அளிக்கும். ஆனால், அஸ்வினின் மைல்கல் அவர் மீதான மதிப்பை அதிகப்படுத்தியுள்ளது. இன்னும் 5 ஆண்டுகள் அஸ்வின் விளையாடினாலும் அவரது காலத்தின் சிறந்த வீரர்களில் ஒருவராக அஸ்வின் என்றுமே திகழ்வார்.

ஹர்பஜன் சிங் போலவே அஸ்வினும் சிறந்த சுழற்பந்து வீச்சாளர். ஆனால் ஹர்பஜன் அளவுக்கு அஸ்வின் தாக்குதல் பவுலர் அல்ல.

ஹர்பஜன் சிங் ஆடிய காலத்தில் இந்திய அணி வேகப்பந்து வீச்சில் சிறந்து திகழவில்லை. அப்படியான சமயத்தில் ஹர்பஜன் சிங், தாக்குதல் முறையில் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜாகீர் கான், ஸ்ரீநாத் ஆகியோர் சிறந்த பந்துவீச்சாளர்கள் தான் என்றாலும் தற்போதைய இந்திய அணியைப்போல், வலுவான வேகப்பந்து வீச்சு வரிசை கிடையாது. அந்த மாதிரியான சூழலில், ஹர்பஜன் சிங் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றால், இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கும். ஆனால், தாக்குதல் முறையில் பந்துவீசி ஹர்பஜன் சிங், விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதேபோல, வெங்கடேஷ் பிரசாத் சிறந்த டெஸ்ட் பவுலர் கிடையாது. அப்போது டெஸ்ட் போட்டியிலும் ஹர்பஜன் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆனால், தற்போது புவனேஷ்குமார், பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் என இந்திய வேகப்பந்து வீச்சு வலுவான நிலையில் உள்ளது. எனவே அஸ்வின் தாக்குதலாக பந்துவீச வேண்டிய அவசியம் இல்லை. எனினும் அஸ்வின், அவரது பணியை செவ்வனே செய்துவருகிறார் என ஹைடன் தெரிவித்துள்ளார். 
 

click me!