
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 12-வது ஆட்டத்தில் கோவா அணி 4-3 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில் எஃப்சி கோவா அணி 4-3 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தியதால் தொடர் வெற்றி கண்டுவந்த பெங்களூரு அணி சீசனின் முதல் தோல்வியை சந்தித்தது.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் கோவாவில் நேற்று இரவு நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோவா அணியின் ஃபெரான் 16-வது நிமிடத்தில் கோலடித்தார். அதற்கு பதிலடியாக பெங்களூரு வீரர் மிக்கு 21-வது நிமிடத்தில் கோலடித்தார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் ஃபெரான் மீண்டும் ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். சக வீரர் மேனுவலின் பெனால்டி கோலை அடுத்து கோவா 3-1 என முன்னிலை பெற்றது.
பின்னர் நடைப்பெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் கோவா அணி 4-3 என வென்றது.
இந்த ஆட்டத்தில் கோவா தரப்பில் ஃபெரோன் கோரோமினாஸ் மூன்று கோல்களும், மேனுவல் லேன்சரோட்டே ஒரு கோலும் அடித்தனர்.
பெங்களூரு அணியில் மிக்கு இரண்டு கோல்களும், எரிக் பார்தலு ஒரு கோலும் அடித்தனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.