
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என இந்தியா அணி ஏற்கனவே வென்றுவிட்ட நிலையில், ஆறாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது.
இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சிறப்பான பேட்டிங், சாஹல் மற்றும் குல்தீப்பின் அற்புதமான சுழல் ஆகியவற்றின் காரணமாக வரலாற்று சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. இதுதான் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி வென்றுள்ள முதல் தொடர்.
அந்த வகையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பாராட்டு மழையில் நனைகிறது. எனினும் உலகக்கோப்பைக்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில், மிடில் ஆர்டரை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
இந்திய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், ஆறாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா வென்றால், 5-1 என அபாரமாக தொடரை கைப்பற்றும். இதற்கு முன்னதாக தென்னாப்பிரிக்க மண்ணில் ஆஸ்திரேலியா மட்டுமே அந்த அணியை 5 போட்டிகளில் வீழ்த்தியுள்ளது. இந்நிலையில், இன்றைக்கு இந்தியா வென்றால், அந்த சாதனையை ஆஸ்திரேலியாவுடன் இந்தியா பகிரும்.
சாதனை படைக்கும் நோக்கில் இந்தியாவும் ஆறுதல் வெற்றி பெறும் நோக்கில் தென்னாப்பிரிக்காவும் களமிறங்குகிறது. இந்த போட்டியின் வெற்றி டி 20 போட்டிகளில் உத்வேகம் அளிக்கும் என்பதால் வெற்றி பெறும் முனைப்பில் தென்னாப்பிரிக்கா உள்ளது.
சாதனை படைக்குமா இந்தியா? ஆறுதல் வெற்றி பெறுமா தென்னாப்பிரிக்கா?
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.