ஹாக்கி போட்டியில் அசத்தலான ஆட்டத்தால் நியூஸிலாந்தை வீழ்த்தி இந்தியா கர்ஜனை...

 
Published : Jan 25, 2018, 11:37 AM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
ஹாக்கி போட்டியில் அசத்தலான ஆட்டத்தால் நியூஸிலாந்தை வீழ்த்தி இந்தியா கர்ஜனை...

சுருக்கம்

India defeat New Zealand in hockey

நான்கு நாடுகள் மோதும் ஹாக்கி போட்டியில், 2-ஆவது பகுதியின் முதல் ஆட்டத்தில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்தை வீழ்த்தியது.

நியூஸிலாந்தில் 4 நாடுகள் மோதும் ஹாக்கி போட்டி ஹாமில்டன் நகரில் நேற்று நடைபெற்றது. இதில், நியூஸிலாந்து - இந்தியா மோதியது.

இந்த ஆட்டத்தில் 7-வது நிமிடத்தில் கோல் கணக்கை தொடங்கியது இந்தியா. மன்பிரீத் சிங் பாஸ் செய்த பந்தை விவேக் சாகர் பிரசாத் கோல் போஸ்டை நோக்கி அனுப்ப, அதை மிகச்சரியாகத் தடுத்தார் நியூஸிலாந்து கோல்கீப்பர்.

எனினும், மீண்டும் களத்துக்கு திரும்பிய பந்தை சரியான இடைவெளியில் அடித்து ஸ்கோர் செய்தார் லலித் உபாத்யாய. 2-வது கால் மணி நேரத்தில் நியூஸிலாந்து வீரர்கள் இந்தியாவின் கோல் போஸ்ட்டை சுற்றியபோதும், அந்த அணியின் கோல் வாய்ப்புகளை ஸ்ரீஜேஷ் திறமையாகத் தடுத்தார்.

எனினும், 23-ஆவது நிமிடத்தில் நியூஸிலாந்து வீரர் டேனியல் ஹாரிஸ் அடித்த பந்தை இந்திய தடுப்பாட்ட வீரர்கள் தவறவிட, முதல் பாதி முடிவில் ஆட்டம் 1-1 என சமன் ஆனது.

பின்னர், தொடங்கிய ஆட்டத்தில் 32-வது நிமிடத்தில் மன்பிரீத் சிங் ஏற்படுத்திக் கொடுத்த பெனால்டி வாய்ப்பை அருமையான கோலாக மாற்றிய ஹர்ஜீத் சிங், அணியை 2-1 என முன்னிலை பெறச் செய்தார்.

இதேபோல, 36-வது நிமிடத்தில் லலித் உபாத்யாய் மூலமாக கிடைத்த பெனால்டி வாய்ப்பை ரமன்தீப் சிங் டிராக் ஃப்ளிக் செய்ய, அதை சரியாகத் திசை திருப்பி கோலடித்தார் ரூபிந்தர் பால் சிங். அதற்கு பதிலடியாக அடுத்த நிமிடத்திலேயே நியூஸிலாந்துக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணியின் கேன் ரùஸல் கோலாக மாற்றினார்.

மீதமிருந்த நேரத்தில் நியூஸிலாந்துக்கு மேலும் கோல் வாய்ப்பு கிடைக்காமல் தடுத்த இந்தியா, இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்று  அசத்தியது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

சுப்மன் கில் ஆடியே ஆகணும்.. அடம்பிடித்த கம்பீர், அகர்கர்.. தேர்வுக்குழுவில் எதிர்த்த 'அந்த' 2 பேர் யார்?
ஆஷஸ் 2025: தொடர் வெற்றிக்குப் பிறகு ஸ்டூவர்ட் பிராட்டின் கிண்டலுக்கு டிராவிஸ் ஹெட் பதிலடி