தொடர்ந்து இரண்டாவது முறை உலக கோப்பை சாம்பியன் ஆனது இந்தியா..

 
Published : Feb 13, 2017, 01:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
தொடர்ந்து இரண்டாவது முறை உலக கோப்பை சாம்பியன் ஆனது இந்தியா..

சுருக்கம்

பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடார்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது

இதன்மூலம் தொடர்ந்து 2-ஆவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றி உலகக் கோப்பையின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்துள்ளது இந்தியா.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 197 ஒட்டங்கள் குவித்தது. அந்த அணியில அதிகபட்சமாக பதார் முனி 57 ஒட்டங்கள் குவித்தார்.

இந்தியத் தரப்பில் கேதன் படேல், முகமது ஜாபர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய இந்திய அணி 17.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 200 ஒட்டங்கள் எடுத்து வெற்றி கண்டது.

இந்திய அணியில் அதிகபட்சமாக பிரகாஷ் ஜெயராமையா ஆட்டமிழக்காமல் 99 ஒட்டங்கள் குவித்தார்.

பாகிஸ்தான் வீரர் பதார் முனிர் 570 ஒட்டங்கள் குவித்ததன் மூலம் தொடர் நாயகன் விருதை வென்றார்.

இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி 9 ஆட்டங்களில் விளையாடி அதில் 8-இல் வெற்றி கண்டது.

அதேநேரத்தில் பாகிஸ்தான் அணி, இறுதி ஆட்டத்தைத் தவிர எஞ்சிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

33 பந்துகளில் சதம் விளாசிய இஷான் கிஷன்.. சிக்சர் மழை.. ஒரே ஒரு பந்தில் மிஸ்ஸான வரலாற்று சாதனை!
வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் மின்னல் வேக சதம்.. 14 வயதில் டி வில்லியர்ஸ் சாதனையை தூள் தூளாக்கி மாஸ்!