போட்டி போட்டு விளையாடியும் சமனில் முடிந்தது இந்தியா ஏ – வங்கதேசம் போட்டி…

 
Published : Feb 07, 2017, 11:37 AM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
போட்டி போட்டு விளையாடியும் சமனில் முடிந்தது இந்தியா ஏ – வங்கதேசம் போட்டி…

சுருக்கம்

இந்தியா "ஏ' - வங்கதேசம் இடையிலான இரண்டு நாள் பயிற்சி கிரிக்கெட் ஆட்டம் சமனில் முடிந்தது.

இரண்டு நாள் பயிற்சி கிரிக்கெட் ஆட்டம் ஹைதராபாதில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 67 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் 58, செளம்ய சர்க்கார் 52 ஓட்டங்கள் எடுத்தனர்.

இந்தியத் தரப்பில் அனிகெட் செளத்ரி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து பேட் செய்த இந்திய "ஏ' அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 21 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 91 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

பி.கே.பன்சால் 40, ஷ்ரேயஸ் ஐயர் 29 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.

2-ஆவது நாளான திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய இந்திய "ஏ' அணியில் வேகமாக ஓட்டங்கள் சேர்த்த ஷ்ரேயஸ் ஐயர் சதமடித்தார். அவர் 92 பந்துகளில் 4 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் எடுத்து மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக வெளியேறினார்.

ஷ்ரேயஸ் - பன்சால் ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 159 ஓட்டங்கள் குவித்தது.

இதன்பிறகு பி.கே.பன்சால் 148 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 103 ஓட்டங்கள் சேர்த்து ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேற, பின்னர் வந்த ரிஷப் பந்த் 19, ஜக்கி 23, இஷன் கிஷான் 11, ஹார்திக் பாண்டியா 7 ஓட்டங்களில் நடையைக் கட்டினர்.

அப்போது இந்திய "ஏ' அணி 60.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 287 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இதன்பிறகு 8-ஆவது விக்கெட்டுக்கு சங்கருடன் இணைந்தார் சைனி. இந்த ஜோடி அசத்தலாக ஆட, இந்திய "ஏ' அணி 400 ஓட்டங்களைக் கடந்தது. சைனி 66 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சங்கர் - சைனி ஜோடி 115 ஓட்டங்கள் குவித்தது. சங்கர் சதமடித்தவுடன் இந்திய கேப்டன் அபிநவ் முகுந்த் டிக்ளேர் செய்தார்.

அப்போது இந்தியா 90 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 461 ஓட்டங்கள் குவித்திருந்தது. சங்கர் 103, ஜெயந்த் யாதவ் 6 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.

வங்கதேசம் தரப்பில் சுபாஷிஸ் ராய், தைஜுஸ் இஸ்லாம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இந்த ஆட்டத்தில் வங்கதேச அணி 8 பெளலர்களை பயன்படுத்தியபோதும், இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

பின்னர் ஆடிய வங்கதேச அணி ஆட்டநேர முடிவில் 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 73 ஓட்டங்கள் எடுத்தது.

தமிம் இக்பால் 42, மகமதுல்லா 1 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இறுதியில் ஆட்டம் சமனில் முடிந்தது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் ஹசாரே டிராபியில் கோலி மிரட்டல் சதம்.. 16000 ரன்களை கடந்து புதிய சாதனை
'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!