இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் 6-வது ஆட்டம் இன்று; அசத்த தயாராக இருக்கும் இந்தியா...

Asianet News Tamil  
Published : Feb 16, 2018, 11:24 AM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் 6-வது ஆட்டம் இன்று; அசத்த தயாராக இருக்கும் இந்தியா...

சுருக்கம்

India - South Africa crash in the 6th game today

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 6-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மொத்தம் 6 ஆட்டங்கள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் 5 ஆட்டங்கள் முடிவில் 4-1 என முன்னிலை வகிக்கிறது இந்தியா.

போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 5-வது ஆட்டத்தில் வென்றதன் மூலம், தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்று சாதனை புரிந்துள்ளது இந்தியா.

அத்துடன், ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.

கடைசி ஆட்டத்திலும் வென்று, ஒருநாள் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யும் முனைப்பில் இந்தியா உள்ளது. மறுபுறம், இந்தத் தொடரில் இதுவரை ஒரேயொரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது தென் ஆப்பிரிக்கா.

இரு அணிகளிலும் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. இலங்கை சுற்றுப் பயணத்திலிருந்து இதுவரை புவனேஷ்வர் குமார் 19 ஒருநாள், 6 டி20 ஆட்டங்களிலும், ஜஸ்பிரீத் பும்ரா 20 ஒருநாள், 8 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளனர். எனவே, அடுத்த சுற்றுப் பயணத் தொடர்களுக்கு முன்பாக அவர்கள் இருவருக்கும் அளிக்கப்படும் ஓய்வு பயனுள்ளதாக இருக்கும்.

முகமது ஷமி 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு 3 ஒருநாள் தொடர்களில் மட்டுமே ஆடியுள்ளார். 4-வது தேர்வான ஷர்துல் தாக்குர் 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

இத்தொடரில் 4 முதல் 7-வது எண் வரையிலான பேட்ஸ்மேன்களால் ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது. மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் ஆகியோர் தங்களது வாய்ப்புகளுக்காக காத்திருக்கின்றனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ருத்ராஜ் மரண அடி.. ஜாம்பவான் சாதனையை ஓவர்டேக் செய்து மாஸ்.. சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி!
நியூசிலாந்து தொடரில் இருந்து இந்திய அணியின் சிக்சர் மன்னன் விலகல்! ரசிகர்கள் ஷாக்!