குத்துச்சண்டை போட்டியில் 5 தங்கம் வென்று இந்தியா அசத்தல்...

Asianet News Tamil  
Published : Feb 16, 2018, 11:20 AM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
குத்துச்சண்டை போட்டியில் 5 தங்கம் வென்று இந்தியா அசத்தல்...

சுருக்கம்

India won 5 gold in boxing

ஆசிய விளையாட்டு தேர்வுப் போட்டி குத்துச்சண்டையில் இந்தியா 5 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் வென்றது.

ஆசிய விளையாட்டு தேர்வுப் போட்டி குத்துச்சண்டை போட்டி வங்கதேசத்தில் நடைபெற்றது. இதில்  ஆடவர் பிரிவில் மணீஷ் கெளஷிக் 60 கிலோ எடைப் பிரிவு, ஷியாம் குமார் 49 கிலோ, ஷேக் சல்மான் அன்வர் 52 கிலோ, ஆஷிஷ் 64 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர்.  மகளிர் பிரிவில் பவித்ரா 60 கிலோ பிரிவில் தங்கத்தை தட்டிச் சென்றார்.

அதேபோன்று,. 57 கிலோ பிரிவில் ஷஷி சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். முகமது எடாஷ் கான் 56 கிலோ, ரிது கிரெவால் 51 கிலோ, பவன் குமார் 69 கிலோ, ஆஷிஷ் குமார் 75 கிலோ ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

இந்தப் போட்டியின் கடைசி நாளான நேற்று, முதல் ஆட்டத்தில் மகளிருக்கான இறுதிச் சுற்று ஒன்றில் பவித்ரா 5-0 என்ற கணக்கில் தாய்லாந்தின் நிலாவன் டெசாசெப்பை வீழ்த்தினார்.

ஆடவர் பிரிவில் ஷியாம் குமார் 4-1 என இந்தோனேஷியாவின் மரியோ பிளாசியஸை வீழ்த்தினார்.

சல்மான் அன்வர் 5-0 என ஃபிலிபினோ ரோஜன் லாடனையும், மணீஷ் கெளஷிக் - ஜப்பானின் ரென்டாரோ கிமுராவையும், ஆஷிஷ் - வங்கேதசத்தின் சுகர் ரேவையும் வீழ்த்தினர்.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ருத்ராஜ் மரண அடி.. ஜாம்பவான் சாதனையை ஓவர்டேக் செய்து மாஸ்.. சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி!
நியூசிலாந்து தொடரில் இருந்து இந்திய அணியின் சிக்சர் மன்னன் விலகல்! ரசிகர்கள் ஷாக்!