இந்திய – இங்கிலாந்து இன்று மோதல்…

Asianet News Tamil  
Published : Dec 08, 2016, 12:39 PM ISTUpdated : Sep 19, 2018, 02:40 AM IST
இந்திய – இங்கிலாந்து இன்று மோதல்…

சுருக்கம்

இந்தியா-இங்கிலாந்து மோதும் 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. 

மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஒரு ஆட்டம் சமனில் முடிந்துள்ளது. எனவே, தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் வான்கடே டெஸ்டில் இந்தியா களமிறங்கியுள்ளது. மறுமுனையில், தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது. 

இதற்கு முன்பாக கடந்த 1985-1987 காலகட்டத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தொடர்ந்து 17 போட்டிகளில் தோல்வியைத் தழுவாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது 16 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி காணாமல் தொடர்ந்து வரும் இந்திய அணி, வான்கடே டெஸ்டிலும் தோல்வியை தவிர்கும் பட்சத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை பெறும்.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் ரஹானே, சமிக்குப் பதிலாக ராகுல், புவனேஸ்வர் குமார் இடம்பெற்றுள்ளார்கள். இங்கிலாந்து அணியில் கீட்டன் ஜென்னிங்ஸ், ஜேக் பால் புதிதாக இடம்பெற்றுள்ளார்கள். 

முதல் ஒருமணி நேரத்தில் இங்கிலாந்து அணி, 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 49 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs WI 4th T20: 2 அதிரடி மாற்றம்.. வைபவ் சூர்யவன்ஷி கம்பேக்.. சிக்சர் மன்னனுக்கு இடமில்லை.. பிளேயிங் லெவன்!
IND vs WI: 250 ரன் அடிச்சும் தோத்துட்டோமே.. இந்திய பவுலிங் கோச்சை விளாசித் தள்ளிய ஜாம்பவான்!